கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை சி.வி.சண்முகம் இன்று திறந்து வைத்த நிகழ்வு, அதிமுகவுக்குள் பெரும் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திறப்பு விழாவுக்கு முன்பாக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இடைக்காலப் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.-இன் புகைப்படம் சி.வி.சண்முகத்தின் வருகையையொட்டி திடீரென அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்ததாகத் தெரிகிறது. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிப் பிரிவுக்குப் பிறகு சி.வி.சண்முகம் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்காத நிலையில், தற்போது அவரது புகைப்படம் அகற்றப்பட்ட விவகாரம் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் சி.வி.சண்முகம் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளனரா என்ற பரபரப்பான கேள்வியும், விவாதமும் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது.
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான கட்டுமான மேற்பார்வையாளர் கிஷோர் தனாக், தனது 5 வயது மகளைக்…
ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், தர்மவரத்தின் சிவ்நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்வலத்தின்…
புனே-சதாரா நெடுஞ்சாலையில் போர் தாலுகாவிற்கு உட்பட்ட கிக்வி பகுதியில், கவனக்குறைவாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பினாக் சைலேந்திர…
ஹல்தவானி கம்லுவாகஞ்சா சாலையில் கடந்த செப்டம்பர் 14 அன்று மாலையில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. செவிலியர் பயிற்சி மாணவியான…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…