குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான கட்டுமான மேற்பார்வையாளர் கிஷோர் தனாக், தனது 5 வயது மகளைக் கொன்றுவிட்டு தானும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர், சிறுமியின் உடலை ஒரு குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து மீட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த அறையானது பலூன்கள், மெழுகுவர்த்திகள் மற்றும் சாக்லேட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறுமியின் பிறந்தநாளைக் கொண்டாடுவது போன்ற சூழலை உருவாக்கி, அந்த இறுதிக் கொண்டாட்டத்திற்குப் பிறகே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்த்தப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பணப் பிரச்சனையே இந்த முடிவுக்குக் காரணம் எனப் போலிசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் இருந்து கிஷோர் தனாக் எழுதியதாகக் கருதப்படும் மூன்று கடிதங்களை போலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில் தமக்கு இருந்த கடுமையான நிதி நெருக்கடி, இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் மற்றும் மன்னிப்பு கோரும் வரிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்குப்பதிவு செய்துள்ள போலிசார், இச்சம்பவம் தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், 'தி மிசா மார்க்' என்ற…
டெல்லியைச் சேர்ந்த ' பெஜெயின்டில் ' என்ற சமூக வலைதளப் படைப்பாளி , இரவில் பெண்களின் பாதுகாப்பைச் சோதித்துப் பார்க்க…
நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தர் கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில்…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவும் பிரபல இளம் பாடகியுமான மைதிலி தாகூர், மும்பையின் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர்…
ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தின் நுழைவு வாயில் அருகே, பிரம்மாண்டமான மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிவதைக் கண்டு அங்கிருந்த…
ரஷியாவில் 31 வயதான தாய் ஒருவர், தனது சொந்தச் சிறுவனிடம் "உன் தந்தை உன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார்.…