Connect with us

CINEMA

19 முறை ரஜினியுடன் நேரடியா மோதிய மைக் மோகன் படங்கள்.. ஜெயிச்சது யாருன்னு தெரியுமா..?

நடிகர் மோகன், தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வௌ்ளி விழா நாயகனாக போற்றப்பட்டவர். அவர் படங்கள் என்றாலே, 100 நாட்கள் ஓடும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. 1980களில் ரஜினி நடித்த பல படங்கள், நடிகர் மோகன் நடித்த படங்கள் குறைந்த நாட்கள் இடைவெளியில் வெளிவந்தன. தீபாவளி, பொங்கல் விசேஷ நாட்களில் ஒரே நாளிலும் ரிலீஸ் செய்யப்பட்டன. இதில் ரஜினி படங்களை காட்டிலும், மோகன் நடித்த படங்கள் அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்றிருக்கின்றன. சில படங்கள் ரஜினி படங்களுக்கு சமமான நாட்கள் ஓடியிருக்கின்றன.

Rajinikanth

   

1980 முதல் 1990கள் வரை பத்து ஆண்டுகளில் வெளிவந்த ரஜினி, மோகன் படங்களில் 9 படங்கள் வரை, மோகனின் படங்களே அதிக நாட்கள் ஓடியிருக்கின்றன. 3 படங்கள் சமமாக நாட்கள் ஓடிய நிலையில், சில படங்கள் மட்டுமே மோகன் படங்களை விட, ரஜினி படங்கள் அதிகமாக ஓடியிருக்கின்றன. அந்த காலகட்டத்தில் மோகன் நடித்த விதி, நிரபராதி, மனைவி சொல்லே மந்திரம், உதயகீதம், நெஞ்சத்தை கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதயகோவில், உயிரே உனக்காக, மெல்ல திறந்தது கதவு படங்கள் பெரிய அளவில் ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன. இதில் நெஞ்சத்தை கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை, 365 நாட்கள் வரை ஓடியது. விதி 500 நாட்கள் வரை தொடர்ந்து ஓடியது.

Rajinikanth

ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை, தங்கமகன், பொல்லாதவன், மூன்று முகம், மிஸ்டர் பாரத், வேலைக்காரன், ஊர்க்காவலன் ஆகிய படங்கள் ரஜினிக்கு நல்ல வெற்றி படங்களாக அமைந்தன. இதில் சில படங்கள் 200 நாட்கள், பல படங்கள் 100 நாட்கள் வரைதான் ஓடியது. ஆனால் மோகனின் படங்கள் சாதாரணமாகவே 100 நாட்களும், பல படங்கள் 200 நாட்கள், 365 நாட்கள் எனவும், விதி 500 நாட்கள் வரையும் ஓடியது. மிக எளிமையாக கதைகளாக இருந்தாலும், மோகனின் யதார்த்தமான நடிப்பும், இளையராஜாவின் பாடலும், இசையும் வேற லெவலில் இருந்ததால், ரஜினியை விட மோகன் முன்னிலையில் இருந்தார். ரஜினி படங்களில் இருந்த ஸ்டைல், ஆக்சனை காட்டிலும் மோகனின் படங்கள் ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனதால், ரஜினியை விட மோகனே அப்போது டாப் லெவலில் இருந்தார் என்பதையே அவரது வெற்றிப்படங்கள் நிரூபிக்கின்றன.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top