கத்தியால் குத்திய காதலன்… காரை வெடிக்கச் செய்த குண்டு… துமகூருவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் ஊழியராகப் பணிபுரிந்து வரும் ரம்யா உல்லாஸ் என்ற பெண், நாகேந்திரா என்ற வாலிபருடன் வாடகை கார் ஒன்றில் பெங்களூருவிலிருந்து அங்கோலா நோக்கிப் புறப்பட்டுள்ளார். கார் துமகூரு அருகே வந்துகொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நாகேந்திரா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரம்யாவை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரம்யா, சமயோசிதமாகச் செயல்பட்டு காருக்குள் வெடிகுண்டு இருப்பதாக ஓட்டுநரிடம் எச்சரித்துவிட்டு, ஓடும் காரில் இருந்து கீழே குதித்துத் தப்பியுள்ளார்.

பெண்ணின் எச்சரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் பிரவீன், உடனடியாக காரை நிறுத்திவிட்டு வெளியே குதித்து உயிர் தப்பினார். அவர்கள் இருவரும் காரை விட்டு வெளியேறிய அடுத்த சில நொடிகளில், காருக்குள் இருந்த நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபரீத வெடிவிபத்தில் கார் முற்றிலும் தீப்பற்றி எரிந்து, அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்தது. காருக்குள்ளேயே மாட்டிக்கொண்ட வாலிபர் நாகேந்திரா, சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த ரம்யா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காருக்குள் நாட்டு வெடிகுண்டு எப்படி வந்தது, அதனை நாகேந்திரா எதற்காகக் கொண்டு வந்தார் மற்றும் இந்த கொடூரத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SATHISH R

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

2 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

3 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

3 மணத்தியாலங்கள் ago