ரேடியோ ஜாக்கியாக இருந்து சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கியவர் விஜய். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதமே தனி. இவருக்கென ரசிகர்கள் அதிகம் உள்ளனர். மிர்ச்சி விஜய் என்றால் தெரியாதவர்களே இத்துறையில் இருக்க முடியாது. இவர் சமீபத்தில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார்.
இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘டான்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
மிர்ச்சி விஜய் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் மிர்ச்சி விஜயின் மனைவி மோனிகா.
இவர் அவ்வப்பொழுது தனது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது தனது மகனின் மூன்றாவது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்கள் ‘மிர்ச்சி விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா?’ என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…
பிரான்ஸின் லியோன் நகரைச் சேர்ந்த 19 வயதான கிளியோ வெர்டியர், கடந்த 2025 ஜூன் மாதம் கடும் மன உளைச்சல்…
பிரான்ஸின் சௌன்-எட்-லோயர் (Saône-et-Loire) பிராந்தியத்தில் உள்ள காடுகளில் மான்கள் சில விசித்திரமாக நடந்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு மான்…
மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் என்ற வாலிபர் அண்மையில் திடீரென காணாமல் போன நிலையில், அவர் பணத்திற்காகக் கொடூரமான…
புது தில்லி ரயில் நிலையத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த உள்ளடக்கப் படைப்பாளியான (Content Creator) இந்தா என்ற பெண் பயணிக்கு ஏற்பட்ட…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, அதிமுக வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று தாம் முன்மொழிந்ததாக…