தமிழக சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சு மற்றும் அரசு ரகசியங்கள் கசிந்தது தொடர்பான சர்ச்சை குறித்து திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ஜனநாயக முறைப்படி நடைபெறும் சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய பதிலளிக்கப்பட்டு வருகிறது என்றும், அவைக் குறிப்பில் இருந்து மரபுக்கு மாறான வார்த்தைகளை நீக்குவது வழக்கமான நடைமுறைதான் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடம் இருக்கவில்லை என்பதால் இந்த மாண்புகளைப் பற்றி எதிர்கட்சியினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்ட அவர், சபாநாயகர் தனது பணியைச் சிறப்பாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகளைச் கடுமையாக விமர்சித்த அமைச்சர், கேமராவை அவர்கள் பக்கம் திருப்பினால் எப்படி ரீல்ஸ் போட முடியும் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றார். முதன்முறையாகச் சட்டமன்றத்திற்கு வந்துள்ள உறுப்பினர்களாகிய நாங்கள் மாண்புடன் கருத்துகளை முன்வைக்கும் வேளையில், எதிர்க்கட்சியினர் எழுந்து நின்று கூச்சல் போடுவதையும், வரிக்கு வரி கத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர் எனக் குற்றம்சாட்டினார். மேலும், முன்னாள் அமைச்சர்கள் பின்வரிசையில் அமர்ந்துகொண்டு தற்போதைய அமைச்சர்கள் பேசும்போது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும், சட்டமன்றத்தைச் சந்தை நடத்தும் இடமாக மாற்றி திமுகவினர் மாண்பின்றிச் செயல்படுவதாகவும் அவர் சாடினார்.
முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து வந்துள்ள மக்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் அரசு பார்த்துக் கொள்ளும் என்றும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான மற்றும் சிதலமடைந்த திருக்கோயில்களைப் புதுப்பித்து வழிபாட்டுக்குக் கொண்டு வர பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். அமைச்சர்கள் அனைவரும் அரசுக்கு எதிரான கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் எந்தத் தவறும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அறநிலையத்துறை அறிவிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து திமுகவினர் நள்ளிரவு முதல் திட்டமிட்டுப் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, அன்பில் மாரியம்மன் கோயிலில் அம்மை பாதிக்கப்பட்டவர்கள் தங்குவது குறித்து சமூக வலைதளங்களில் பொய்களைப் பரப்பி வரும் திமுக ஐடி விங்கிற்கு அந்தத் திட்டத்தின் முழுமையான நோக்கம் தெரியவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், அறநிலையத்துறை அறிவிப்புகள் குறித்து முன்னாள் அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பினார். மடியில் கனம் இருப்பதால், எங்கே தங்களது தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்திலேயே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், அந்த பயமே தங்களது ஆட்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி என்றும் கூறினார். மேலும், திருக்கோயில்களில் செல்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முதற்கட்டமாக 50-க்கும் மேற்பட்ட முதன்மைத் திருக்கோயில்களில் மொபைல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், திருப்பதி கோயிலைப் போலத் தமிழகத்திலும் பொதுமக்கள் அமைதியான மனநிலையுடன் சாமி தரிசனம் செய்ய இந்த நடைமுறை கொண்டுவரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…