“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

Spread the love

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த ‘ஓலா’ என்ற பூனையைத் தன் தாயார் புதிய வீட்டிற்கு அழைத்துச் செல்ல அனுமதிக்காததால், வேறு வழியின்றித் தன் அண்டை வீட்டில் உள்ள அக்காவிடம் விட்டுச் சென்றுள்ளான். பூனையைப் பராமரிப்பதற்காகத் தான் சேமித்து வைத்திருந்த 50,000 ரூபாய் பணத்தையும், மனதை உருக்கும் வகையிலான ஒரு கடிதத்தையும் அந்தப் பூனையுடன் சேர்த்து வைத்துள்ளான்.

அந்தக் கடிதத்தில், “அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா. இந்தப் பூனையின் பெயர் ஓலா. நான் இப்படிச் செய்வது தவறு என்று எனக்குத் தெரியும் அக்கா, ஆனால் எனக்கு வேறு வழியில்லை. உங்களைத் தவிர வேறு யாரிடமாவது என் பூனையை விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது அக்கா. நானும் என் குடும்பமும் வீடு மாறுகிறோம் அக்கா, என் அம்மா இந்தப் பூனையை என்னுடன் அழைத்து வர அனுமதிக்க மாட்டார். தயவுசெய்து இதைப் பார்த்துக்கொள்ளுங்கள் அக்கா. என்னிடம் இந்த 50,000 ரூபாய் மட்டுமே உள்ளது அக்கா,” என்று தன் ஏக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்தியிருந்தான்.

தன் செல்லப் பிராணியைப் பிரிய மனமில்லாமல், அதைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் சிறுவன் எழுதிய இந்த உணர்ச்சிப்பூர்வமான கடிதமும், அவனது நிதியுதவியும் சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைத் தொட்டுப் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

4 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

4 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

4 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

4 மணத்தியாலங்கள் ago