அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

Spread the love

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது நிலைப்பாட்டைத் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார். விஜய், தனுஷ் போன்ற திரைநட்சத்திரங்கள் அரசியல் களத்தில் தீவிர ஆர்வம் காட்டி வரும் தற்போதைய சூழலில், அரசியலுக்கு வர விரும்புபவர்கள் தாராளமாக வரலாம் என அவர் தெரிவித்தார். அதே சமயம், அரசியலுக்கு வந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்ற கட்டாயமில்லை என்றும், எங்கிருந்து வேண்டுமானாலும் மக்கள் பணியைச் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். மேலும், மாணவர்களின் நியாயமான போராட்டங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் பதிவு செய்தார்.

தன்னுடைய திரைப்பயணத்தைப் பொறுத்தவரை, அடுத்ததாக வெளியீட்டிற்குத் தயாராக இருக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் தனது திரை வாழ்க்கையில் ஒரு சிறப்பான திருப்புமுனையாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதுதவிர, சொந்தத் தயாரிப்பில் ‘ப்ரோ கிளப்’ மற்றும் யோகி பாபுவை வைத்து தான் இயக்கி வரும் ‘ஆர்டினரி மேன்’ ஆகிய படங்களின் வேலைகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறினார். ‘ஜெயம்’ படம் முதலே தனக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்களைத் தொடர்ந்து சந்திக்க முடியாமல் போனதாகவும், வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி மூலம் இனி ரசிகர்களைத் தொடர்ந்து சந்திக்கவுள்ளதாகவும் உறுதியளித்தார்.

Gayathri

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

2 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

3 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

3 மணத்தியாலங்கள் ago