ரஷ்யாவில் வேலைனு சொல்லி போர் முனைக்கு அனுப்பிய அதிர்ச்சி…. உக்ரைன் எல்லையில் நரக வேதனை…. சிக்கிய தமிழ் இளைஞர்கள்…. திடுக்கிடும் உண்மை….!

Spread the love

ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மயிலாடுதுறை எஸ்பி சினேஹா பிரியாவிடம் அளித்த மனுவில், சீர்காழியைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் கரூரைச் சேர்ந்த பகிரதன் ஆகிய இரு போலி முகவர்களும் தங்களை ஏமாற்றியதாகத் தெரிவித்துள்ளனர்.

மாணவர் விசாவில் வெளிநாடு அழைத்துச் சென்று சட்டவிரோத வேலைகளில் தங்களை ஈடுபடுத்தியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பிரவீன் ஜான்சன் என்பவர், இன்ஸ்டாகிராம் விளம்பரத்தைப் பார்த்து ரூ.4.80 லட்சம் பணம் கொடுத்து மே மாதம் ரஷ்யா சென்றுள்ளார். ஆனால், அங்கு உரிய வேலை விசா இல்லாமல் கூலி வேலைக்கு அனுப்பப்பட்டதால், விசாவின் காலக்கெடு முடிந்ததும் ரஷ்ய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் சொந்தச் செலவில் தாயகம் திரும்பிய அவர், பல இந்திய இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உக்ரைன் எல்லைப் பகுதியில் சிக்கித் தவிப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேபோன்று, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற இளைஞரும் உணவு பேக்கிங் வேலைக்காக ரூ.5.15 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார். அவருக்கு கார் கழுவும் வேலை அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு மாதங்களில் ரஷ்ய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இவ்வாறு இளைஞர்களின் வெளிநாட்டு வேலைக் கனவை முதலீடாக்கி பல லட்சம் ரூபாய் வரை வசூலித்து போலி முகவர்கள் வாழ்க்கையைச் சீரழித்துள்ளதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும், மோசடியில் ஈடுபட்ட முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், முகவர் அருண்குமாரின் தந்தை பணம் கேட்டால் மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Nanthini

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

4 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

4 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

4 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

4 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

4 மணத்தியாலங்கள் ago