தமிழகத்தில் தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து கடந்த 45 நாட்களாக சதி செய்து வருவதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக அரசை எப்படியாவது செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக குறுக்கு வழி முயற்சிகள் தினமும் நடந்து வருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, தவெக எம்.எல்.ஏக்களை 30 முதல் 50 கோடி ரூபாய் வரை விலை பேசி குதிரை பேரத்தில் ஈடுபடும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது கட்சிகளை நடத்த முடியாமல் பாஜகவுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகக் கணித்துள்ளார். அவ்வாறு இணையும் போது மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து இருவருக்கும், எடப்பாடி பழனிசாமி குடும்பத்தில் இருந்து இருவருக்கும் மத்திய கேபினட் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவார்கள் என்றும் விமர்சித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய அதிமுகவை எடப்பாடி பழனிசாமி மொத்தமாக அடமானம் வைத்துவிட்டு, வெறும் லெட்டர் பேட் கட்சி போல நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் சாடினார்.
இந்த ஆட்சி கவிழ்ப்பு சதித் திட்டம் தொடர்பாக ஏற்கனவே திருவல்லிக்கேணி போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். தவெகவின் ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜா மற்றும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ விஜய் ஆகியோரிடம் ஆதரவு கோரி பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் கணேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ள சூழலில், அமைச்சரின் இந்த தற்போதைய கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பயோமெட்ரிக் (கைரேகை அல்லது கருவிழி)…
காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் மீண்டும் ஒரு பெரும் சிக்கல் உருவாகி, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மும்பையை அடுத்த பத்லாப்பூர் கிழக்கு சிர்காவ் பகுதியைச் சேர்ந்த 35 வயதான மாற்றுத்திறனாளி ஹரி ராம் சிங் கொடூரமான முறையில்…
மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும், மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் திமுகவால் இயங்க முடியாது என்பதே வரலாறு என்று மூத்த…
சேலம் மாவட்டம் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக…
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் இளைஞரை இரண்டு பாம்புகள் பின்தொடர்ந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், இது AI தொழில்நுட்பத்தைப்…