பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்றில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு பெண், நடத்துநர் பயணிகளுக்குத் பயணச்சீட்டு வழங்குவதில் மும்முரமாக இருந்த சமயம் பார்த்து, அங்கிருந்த என்ஜின் மீது வைக்கப்பட்டிருந்த அவரது பணப்பையை நைசாகத் திருடித் தனது பைக்குள் மறைத்து வைத்துள்ளார். பணியை முடித்துவிட்டு வந்து பார்த்த நடத்துநர், தனது பணப்பை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சக பயணிகளிடம் விசாரித்தபோது, அந்தப் பெண் மீது சந்தேகம் எழுந்தது. இதனால் நடத்துநர் அவரிடம் கேட்டபோது, தான் எதையும் எடுக்கவில்லை என்று கூறி அந்தப் பெண் நாடகமாடியுள்ளார்.
இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் உடனடியாக அங்கிருந்த பெண் போக்குவரத்துக் காவலருக்குத் தகவல் கொடுத்தார். அந்தப் பெண் காவலர் வந்து சோதனையிட்டபோது, திருடப்பட்ட நடத்துநரின் பணப்பை அந்தப் பெண்ணின் பையிலேயே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்தப் பெண், தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், குழந்தைகள் தன்னை நம்பி இருக்கிறார்கள் என்றும் கூறி தன்னை விட்டுவிடுமாறு அழுது புலம்பி நாடகமாடியுள்ளார். இருப்பினும், நடத்துநரும் காவலரும் சேர்ந்து அவரை காவல் துறையினரிடம் ஒப்படைக்க, போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தைச் சேர்ந்த முகமது நசாகத் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகாவிற்குட்பட்ட டி. நுலேனூர் அருகே வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று…
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணித் தேர்வுகளின் வினாத்தாள்கள் சுமார் 152 முறை கசிந்துள்ளதாகக்…
சென்னை வேளச்சேரியில் தங்கி, தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியின் முன்னாள்…
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின்…
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 17 வயது மகன் குரு பிரசாத், தினமும்…