பழனி முருகனுக்கு விபூதி அடிக்கப் பார்த்தது யார்…? 100 கோடி சொத்தை அபேஸ் செய்யப் பார்த்த அந்த மர்ம… புள்ளிகளின் முகமூடி கிழிந்தது… தமிழகத்தையே உலுக்கிய பகீர் பின்னணி…!!

Spread the love

பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்க முயன்ற நபர்களின் விவரங்கள் தற்போது காவல்துறை முதல் தகவல் அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்த மெகா மோசடியின் பின்னணியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர் ‘திருப்புகழ் சாமிகள், முருகதாஸ் சாமிகள் மற்றும் தண்டபாணி சாமிகள் டிரஸ்ட்’ என்ற போலியான தனியார் அறக்கட்டளையை உருவாக்கி, நிலத்தின் உரிமையாளர் போல நாடகமாடியுள்ளார். இவரிடமிருந்து உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனியைச் சேர்ந்த சேதுபதி ஆகிய இருவர், அந்த 100 கோடி ரூபாய் நிலத்தை வெறும் 2 கோடி ரூபாய்க்குத் தங்களுக்குள் கிரயப் பத்திரம் தயாரித்து கைமாற்றியுள்ளனர்.

கோவில் நிர்வாகத்தின் நிலப் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் கொடுத்த புகாரின் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்ட முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய மூவருடனும், இதற்குத் துணையாக இருந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறுப்பு சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீதும் மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், கிரிமினல் சதி உள்ளிட்ட 5 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றம் இந்த சட்டவிரோத பத்திரப்பதிவை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், இந்த நபர்களின் பெயர்கள் பொதுவெளியில் இத்தனை நாட்கள் மறைக்கப்பட்டதற்குக் கடுமையான அரசியல் மற்றும் அதிகார வர்க்க நெருக்கடிகளே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட வெள்ளத்துரையும் சேதுபதியும் வெறும் முகமூடிகள் என்றும், 1888-ஆம் ஆண்டின் மடத்து ஆவணங்கள் மற்றும் தாலுகா அலுவலக வருவாய்த் துறை ஆவணங்களை மிகத் துல்லியமாகப் போலியாகத் தயாரிப்பதற்குப் பின்னால், மண்டல மற்றும் மாநில அளவிலான முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் ஆசியும் தொடர்பும் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

Swetha

Recent Posts

ரூ. 100 கோடி கோயில் நிலம் வெறும் 2 கோடிக்கு விற்பனையா?… பழனியில் வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்… அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்பு…!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாக்கும் பொருட்டு, இந்து சமய அறநிலையத்துறை…

2 minutes ago

“ஐயோ.. எங்க போய் சொல்ல”…. “உலகத்துலயே இப்படி ஒரு அமைச்சரா?”…. தலையில அடித்துக் கொண்ட நயினார் நாகேந்திரன்… ப்ரஸ் மீட்டில் கலகல…!

சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் காண்பதற்காக, முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் விக்னேஷ் 3 மணி நேரம் பணி…

14 minutes ago

மகளிர்க்கு பேரதிர்ச்சி… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500…. பட்ஜெட்டில் CM விஜய் வைக்கப்போகும் ‘மாஸ்’ செக்…. வெளியான ஷாக் நியூஸ்…!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நிதி ஆதாரங்களைக் கண்டறியும்…

22 minutes ago

“ரூ.5 லட்சம் கொடு.. இல்லைனா பதவியே கிடையாது”…. . N.ஆனந்த் விவகாரத்தில் பரபரப்பு… விஜய்க்கு காத்திருக்கும் பெரிய சிக்கல்….!

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, அமைச்சர் என். ஆனந்துக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த தமிழக வெற்றிக்…

29 minutes ago

4 ஆண்டு திருமண வாழ்க்கை…! “மருமகளை துடிதுடிக்க கொன்று…” மாமியார், மாமனார், நாத்தனாரை தட்டி தூக்கிய போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் சுள்ளியா பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான பாத்திமத் நிஷானா என்ற பெண் குடும்பத் தகராறு மற்றும்…

29 minutes ago

என்ன சிஎம் சார் இதெல்லாம்?… விஜய் கைவசம் இருக்கும் துறையிலேயே லஞ்சமா?…. வெளியான அதிர்ச்சிப் புகார்….!

ஊழலற்ற நிர்வாகமே இலக்கு எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்து வரும் நிலையில், அவர் வசம் உள்ள…

37 minutes ago