“ஐயோ.. எங்க போய் சொல்ல”…. “உலகத்துலயே இப்படி ஒரு அமைச்சரா?”…. தலையில அடித்துக் கொண்ட நயினார் நாகேந்திரன்… ப்ரஸ் மீட்டில் கலகல…!

Spread the love

சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் காண்பதற்காக, முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் விக்னேஷ் 3 மணி நேரம் பணி விடுப்பு கேட்டதாக எழுந்த செய்தி தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சென்சார் பிரச்சனைகளைக் கடந்து, விஜய் முதல்வரான பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அமைச்சரவையில் உள்ள விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகிகளும் படம் பார்க்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், இந்த விடுப்பு விவகாரம் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. எனினும், தாம் யாரிடமும் விடுப்பு கேட்கவில்லை என்றும், அதற்கான ஆதாரம் இருந்தால் காட்டட்டும் என்றும் அமைச்சர் விக்னேஷ் இந்த குற்றச்சாட்டை உறுதியாக மறுத்துள்ளார்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த விவகாரம் குறித்துக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேள்வி எழுப்பியபோது, விரக்தியுடன் தலையில் கைவைத்தபடி, “ஐயோ, இதையெல்லாம் எங்கு போய் சொல்வது! உலகத்திலேயே இப்படி ஒரு அமைச்சரைப் பார்க்க முடியுமா? தலையில்தான் அடித்துக் கொள்ள வேண்டும்” எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், “முதல்வர் நடித்துள்ள படத்தைப் பார்க்க அமைச்சர்கள் லீவு கேட்டுப் போனால் என்ன சொல்வது? அவரை லீவு கடிதமே எழுதிப் கொடுக்கச் சொல்லுங்கள்” என்று எள்ளல் தொனியில் விமர்சித்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பங்கேற்பு குறித்தும் பேசுகையில் நயினார் நாகேந்திரன் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். “காங்கிரஸ் கட்சி முகவரியின்றி கரப்பான்பூச்சிக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டிருக்கிறது” என்று விமர்சித்த அவர், பல கோடி ரூபாய் கொடுத்து மருத்துவராகுபவர்களால் முறையான சிகிச்சை அளிக்க முடியாது என்பதால் தான் நீட் தேர்வு மிக அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன், பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷின் விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும், ராகுல் காந்தியின் அரசியலைக் கண்டித்துத் தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Nanthini

Recent Posts

“எங்களை அசிங்கப்படுத்திட்டீங்க”…. வீதி வீதியாக தவெக வேட்பாளர்களை வறுத்தெடுக்கும் மக்கள்…. ஆளுங்கட்சிக்கே இந்த நிலைமையா?…. அப்செட்டில் விஜய்….!

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தனித்தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,…

53 seconds ago

“ஸ்டாலின் போட்ட ஒரே கணக்கு”…. கொத்தாக தூக்கப்பட்ட தவெக பட்டாளம்…. கே.என்.நேருவின் ஆட்டோகிராஃப் மேடை…!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக தேர்தல் களம்…

7 minutes ago

“ஐயோ வலிக்குது…” இளம்பெண்ணுக்கு உயிரோடு தீ வைத்த வாலிபர்… ஹாஸ்பிடலுக்குள் நுழைந்து அரங்கேறிய பயங்கரம்…. திக் திக் வீடியோ வைரல்…!!

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினிப் பிரிவில் பணியாற்றி வந்த 35 வயது பெண் ஊழியர்…

12 minutes ago

ரூ.5 லட்சத்தை சுருட்டி விட்டு ரூ.27 லட்சம் மிரட்டல்… பிக்பாஸ் வர்ஷினி அதிரடி கைது…. ஹோட்டல் ரூமில் நடந்த விபரீதம்….!

குறும்படத்தில் நடிப்பதற்காக ரூ.5 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதுடன், அதைத் திரும்பக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பிக்பாஸ்…

17 minutes ago

“கடைசி போன் கால்…” கான்ஸ்டபிள் சொன்னதை கேட்டு கதறிய நிச்சயதார்த்த பெண்…. அந்த காட்சியை கண்டு பதறிய போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஹைதராபாத் நகரின் மலாக்பேட் பகுதிக்கு உட்பட்ட சாலிவாகன நகரில் வசித்து வந்த 35 வயதான போலிஸ் காவலர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை…

25 minutes ago