தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினிப் பிரிவில் பணியாற்றி வந்த 35 வயது பெண் ஊழியர் மீது, பிரகாஷ் என்ற நபர் திடீரென மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புகுந்து கொடூரமாகத் தாக்கி, அவர் மீது தீவைத்து கொளுத்தியுள்ளார்.
மருத்துவமனை வளாகத்திலேயே பெண் ஊழியர் தீப்பிடித்து அலறிய சம்பவம் அங்கிருந்தவர்களை உறைந்து போகச் செய்தது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுவிட்டு தப்பியோட முயன்ற பிரகாஷைப் பிடிக்கப் போலிஸ் படை விரைந்தது.
அப்போது போலிஸ் படையையே தாக்க முயன்ற கொடூரன் பிரகாஷைப் போலிஸார் காலில் துப்பாக்கியால் சுட்டு அதிரடியாகக் கைது செய்தனர். மருத்துவமனைக்குள்ளேயே புகுந்து பெண் ஊழியரை உயிரோடு கொளுத்த முயன்ற இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கிராமப்புற எல்லைக்குட்பட்ட நரேனா போலிஸ் சரகத்தில் உள்ள பிங்குன் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர்,…
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ஆம் தேதி…
1980களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இடையே தற்போது வெடித்துள்ள நிதி…
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 73-ல், படீல் பகுதியிலிருந்து நந்தூர் நோக்கி சுற்றுலா கார் ஒன்று…
சேலம் மாநகரில் கடந்த 2021-ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வங்கதேசப் பெண் கொடூரக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி,…
தமிழகத்தில் நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உண்ணிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலின்…