பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாக்கும் பொருட்டு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய புதிய ஆய்வுக் குழு ஒன்றை அமைக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் தலைவராகவும், பழனி வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல் துணை ஆட்சியர் மற்றும் நில அளவை உதவி இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் உறுப்பினர்களாகவும் செயல்படுவர்.
இப்புதிய குழு திருக்கோயிலின் கணக்கில் உள்ள சொத்துக்கள், வருவாய் இனங்கள், கணக்கில் வராத நிலங்கள், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் விதிமுறைகளுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட பெயர் மாற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து விரைந்து அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில், தவறு இழைத்தவர்கள் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயிலைத் தொடர்ந்து, முருகப்பெருமானின் மற்ற அறுபடை வீடுகளுக்கும் இதே போன்ற ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுச் சொத்துக்கள் மீட்டெடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சமீபத்தில் பழனி கோயில் மடத்திற்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம், வெறும் 2 கோடி ரூபாய்க்குத் தனியாருக்கு சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நில மோசடி தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை அந்தப் பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், தற்போது சிபிசிஐடி போலீசார் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சார் பதிவாளர் அலுவலகச் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளையும் அவர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அதேவேளையில், இந்த நில மோசடியில் அமைச்சரின் உறவினருக்குத் தொடர்பிருப்பதாகச் சில குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவற்றை அமைச்சர் சீ.ரமேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன் மீது பொய்க் குற்றச்சாட்டு மற்றும் அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்ததைத் தொடர்ந்து, பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை ஏமாற்றி, அவர்களின் பெயரில் கோடிக்கணக்கில் வங்கிக் கடன் பெற்று…
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி பாண்டிச்செல்வி. முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஜந்தர் மந்தர்' சுற்றுலாத் தலத்திற்குச் சென்ற அமெரிக்க உள்ளடக்க உருவாக்குநர் ஒருவருக்கு,…
தானே நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த தலாவ்பாலி பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும்…
குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், பழமையான மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில்…