தமிழ்நாடு முழுவதும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பயோமெட்ரிக் (கைரேகை அல்லது கருவிழி) விபரங்களைப் பதிவு செய்யும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போலி கார்டுகளைத் தவிர்க்கவும், உரிய பயனாளிகளுக்கு நியாயவிலைப் பொருட்கள் சரியாகச் சென்று சேருவதை உறுதி செய்யவும் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், பல குடும்பங்களில் உறுப்பினர்கள் இன்னும் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளாமல் உள்ளனர்.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 1,523 ரேஷன் கடைகளின் கீழ் செயல்படும் 11.25 லட்சம் ஸ்மார்ட் கார்டுகளில், சுமார் 3.97 லட்சம் பேர் இன்னும் கைரேகை பதிவு செய்யாமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று பயோமெட்ரிக் கருவிகள் மூலம் கைரேகைகளைப் பதிவு செய்து வருகின்றனர். இச்சிறப்பு முயற்சியின் மூலம் கடந்த ஒரு வாரத்திலேயே 60,000-க்கும் மேற்பட்டோரிடம் வெற்றிகரமாக கைரேகை பெறப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுகளில் 95.03 சதவீதமும், முன்னுரிமை கார்டுகளில் 96 சதவீதமும், முன்னுரிமையற்ற கார்டுகளில் 88 சதவீதமும் பயோமெட்ரிக் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள சுமார் 3.40 லட்சம் உறுப்பினர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இதே கள ஆய்வின் போது குடும்பத்தில் உயிரிழந்த உறுப்பினர்களின் விவரங்களை உரிய ஆவணங்களுடன் பெற்று, அவர்களின் பெயர்களை கார்டில் இருந்து நீக்கும் பணிகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து பேசியுள்ள ரேஷன் துறை அதிகாரிகள், “கைரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் உடனடியாக நீக்கப்படும் என்று அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை; எனினும், வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பகுதி ரேஷன் கடைகளுக்கோ அல்லது வீடு தேடி வரும் ஊழியர்களிடமோ தவறாமல் பயோமெட்ரிக் பதிவை நிறைவு செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தைச் சேர்ந்த முகமது நசாகத் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகாவிற்குட்பட்ட டி. நுலேனூர் அருகே வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று…
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணித் தேர்வுகளின் வினாத்தாள்கள் சுமார் 152 முறை கசிந்துள்ளதாகக்…
சென்னை வேளச்சேரியில் தங்கி, தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியின் முன்னாள்…
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின்…
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 17 வயது மகன் குரு பிரசாத், தினமும்…