“திமுகவுக்கு ஷாக்… தவெக-வுக்கு சப்போர்ட்…! நாங்க இருக்கோம்…! விஜய் தலைமையில் கூட்டணி… அந்தர் பல்டி அடித்த திருமாவளவன்…! அதிரடி திருப்பம்…!”

Spread the love

திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தவெக அரசு ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என்றும், இந்த ஆட்சி கவிழ்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தவெக அரசு ஆறு மாதத்தில் கவிழ்ந்துவிடும் என திமுக தலைவர்கள் கூறி வரும் நிலையில், தற்போதைய ஆட்சி மக்களின் கட்டளையால் உருவானது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தவெக ஆட்சியில் தாங்கள் பங்கு பெற்றுள்ளதாகவும், இதற்கான கூட்டணிக் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறிய அவர், விரைவில் தவெக தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்றும் அறிவித்துள்ளார்.

பல்வேறு சமூக மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசிய திருமாவளவன், சபரிவர்மன் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், காவிரி நீர் பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் முதலமைச்சரே வேந்தராக இருக்கும் சட்ட நடைமுறையைத் தற்போதைய அரசு உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், நேரடியாக இந்தியைத் திணிக்கும் நவோதயா பள்ளிகளைத் திறக்கக் கூடாது என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டிலேயே புதிய தவெக அரசும் தொடரும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

மதுரை மற்றும் சேலத்தில் தனது போஸ்டர்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்துப் பேசிய அவர், இது சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கவும், தற்போதைய ஆட்சிக்குக் கெட்ட பெயரை உண்டாக்கவும் சில சாதியவாத, மதவாத கும்பல்கள் செய்யும் திட்டமிட்ட சதி என்று கவலை தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு வரை திமுகவுடன் நட்பு ரீதியிலான கூட்டணி தொடர்வதாகக் கூறிவந்த திருமாவளவன், தற்போது தவெக கூட்டணியில் இருப்பதாகக் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தையும், அவரது பேச்சு மாறி மாறி இருப்பதாக விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

Swetha

Recent Posts

“யார் சாமி நீ… 3 நாள் ஃபர்ஸ்ட் மனைவி… 3 நாள் செகண்ட் மனைவி… 1 நாள் லீவ்…!” – 2 மனைவிகளுடன் கணவன் வாழ… பஞ்சாயத்து போட்ட வினோத கண்டிஷன்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தைச் சேர்ந்த முகமது நசாகத் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு…

14 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! நடைபாதைக்குள் புகுந்த சொகுசு கார்…. வாலிபர் துடிதுடித்து பலி…! நடுநடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகாவிற்குட்பட்ட டி. நுலேனூர் அருகே வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று…

14 minutes ago

நீட், நெட் முறைகேடுகளால் வெடித்த போராட்டம்… 10 ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவு…! மத்திய அரசை தோலுரித்த ராகுல் காந்தி…!!

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணித் தேர்வுகளின் வினாத்தாள்கள் சுமார் 152 முறை கசிந்துள்ளதாகக்…

24 minutes ago

அதிர்ச்சி…! ஜே.சி.பி ஏறி இறங்கி கொடூர விபத்து… மேலூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வின் மகன் துடிதுடித்து பலி…! சென்னையில் சோகம்…!!

சென்னை வேளச்சேரியில் தங்கி, தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியின் முன்னாள்…

28 minutes ago

ஹார்முஸ் ஜலசந்தியில் வெடித்த பதற்றம்…! “ஒரு அடி நகர்ந்தால் டெஹ்ரானை தரைமட்டமாக்குவோம்…” செக் வைத்த அமெரிக்க அதிபர்…. ஈரானுக்கு ட்ரம்ப் கொடுத்த பகீர் வார்னிங்…!!

ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின்…

34 minutes ago

“பகீர்… இரவில் பாட்டியுடன் தூங்கிய… 17 வயது சிறுவன்… காலையில் நேர்ந்த விபரீதம்…! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…! கடலூரில் பெரும் பரபரப்பு…!”

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 17 வயது மகன் குரு பிரசாத், தினமும்…

39 minutes ago