“என்னை காட்டுக்குள் இழுத்துச் சென்று, கீழே படுக்க வைத்து”… பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவி பரபரப்பு வாக்குமூலம்…!

Spread the love

மேற்குவங்கம் மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரிசாவை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் எம்பிபிஎஸ் படித்து வந்துள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தன் ஆண் நண்பருடன் உணவருந்துவதற்கு வெளியே செல்ல முயன்ற போது வழிமறித்த கும்பல் ஒன்று மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் மாணவியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது. தற்போது அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அன்று இரவு நடந்த பயங்கரமான சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், அவர்கள் தங்கள் வாகனத்தை விட்டு விட்டு எங்களை நோக்கி வருவதை நாங்கள் கவனித்தோம். உடனே நாங்கள் காட்டுப்பகுதி நோக்கி ஓட ஆரம்பித்தோம். அந்த கும்பலில் இருந்த மூவர் எங்களை துரத்தி வந்து என்னை பிடித்து காட்டுக்குள் இழுத்துச் சென்றனர். அவர்கள் என்னுடைய தொலைபேசியை பறித்துக் கொண்டு என்னுடைய நண்பரை திரும்ப வருமாறு அழைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். அவர் வராததால் என்னை தரையில் படுக்க சொல்லி வற்புறுத்தினர்.

நான் கத்தி கூச்சலிட்ட போது சத்தம் போட்டால் மேலும் பலரை அழைத்து வந்து இதையே செய்ய வைப்போம் என்று மிரட்டினார்கள் என்று மாணவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பவங்களையும் வரிசையை சரிபார்க்க சந்தேகக்கப்படும் அனைத்து குற்றவாளிகளையும் கல்லூரிக்கு அருகில் உள்ள சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று குற்ற சம்பவத்தை மீண்டும் உருவாக்கி பார்த்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

விஜய் செய்த வரலாற்றுத் தவறு?… கடைசி நேரத்தில் தவெக-வுக்கு காத்திருந்த அதிர்ச்சி… மொத்தமாக ஸ்கோர் செய்த ஸ்டாலின்…!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…

5 minutes ago

“வீட்டில் ரத்தக் கறை.. சுடுகாட்டில் உடல்”…. கணவனைக் கொன்று சுடுகாட்டில் புதைத்த மனைவி…. கள்ளக்காதல் ஜோடிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…

16 minutes ago

ஹார்முஸ் நீரிணையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்… சிம்ம சொப்பனமாக இருக்கும் 5 விஷயம்…. நாளை விடியப்போவது யாருக்கு..?

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…

26 minutes ago

உலக நாடுகளை நடுங்க வைக்கும் ‘ஹார்முஸ் அதிர்ச்சி’… இந்தியப் பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றப்போகும் அந்த 21 மைல் கடல் பாதை….!

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

32 minutes ago

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

50 minutes ago

“என்னை காப்பாத்துங்க” கத்தியும் யாருமே உதவிக்கு வரல..! கண்ணெதிரே துடிதுடித்து இறந்த உயிர்… 33 வயது வாலிபர் நீரில் மூழ்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…

54 minutes ago