மீண்டும் போர்..! டிரம்ப் பேச்சை தூக்கி எறிந்த இஸ்ரேல்.. அதிகாலையில் ஈரான் மீது பயங்கர வான் தாக்குதல்..!!

Spread the love

அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சை மீறி ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை அதிரடி வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று இரவு இஸ்ரேலின் ரமத் டேவிட் விமானத் தளத்தைக் குறிவைத்து ஈரான் நடத்திய 10 பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி ஏற்பட்ட தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, ஈரானிய நிலப்பரப்பின் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும். இந்தத் தாக்குதலால் ஈரானின் தலைநகர் தெஹ்ரான், கரஜ், இஸ்பஹான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயங்கர வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. இதனால் அங்குள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலைய வான்வெளி உடனடியாக மூடப்பட்டு, அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தாக்குதல் நடப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து அமைதி காக்குமாறு வலியுறுத்தினார். இருப்பினும் இஸ்ரேல் அந்தப் பேச்சை முற்றிலும் புறக்கணித்துவிட்டு இந்த ஆக்ரோஷமான தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. முன்னதாக லெபனானின் பெய்ரூட் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கவே ஈரான் நேற்று ஏவுகணைகளை ஏவியிருந்தது. தற்போது இஸ்ரேல் நேரடியாக ஈரானுக்குள் புகுந்து பதிலடி கொடுத்துள்ளதால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்து வந்த தூதரகப் பேச்சுவார்த்தை முற்றிலும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.

Soundarya

Recent Posts

பரபரக்கும் தமிழக அரசியல்…. ‘தி மிசா மார்க்’ ரிலீஸ் தேதி பிக்ஸ்… உதயநிதி போட்ட ஸ்கெட்ச்…. விஜய்க்கு திமுகவின் அதிரடி பதிலடி….!

தமிழக முதல்வர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், 'தி மிசா மார்க்' என்ற…

3 minutes ago

ஐயோ… 20 வருஷம் சிறை… கடைசியில தேநீர் கடையிலயா?… நிதாரி வழக்கு சுரேந்தர் கோலியின் விபரீத முடிவு… அதிர்ச்சி பின்னணி…!

நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தர் கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில்…

40 minutes ago

அடேங்கப்பா…! இத்தனை கோடி விலையா…? சொகுசு காரில் வந்து இறங்கி நெட்டிசன்களை மிரள வைத்த பாடகி… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ…!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவும் பிரபல இளம் பாடகியுமான மைதிலி தாகூர், மும்பையின் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர்…

41 minutes ago

“ஸ்கூட்டரில் மலைப்பாம்புடன் மாஸ் ரைடு…” அதிர்ந்து போன ஐ.டி ஊழியர்கள்…. ஆனாலும் ரொம்ப தைரியம் தான்… நெட்டிசன்களை உலுக்கிய நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ…!!

ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தின் நுழைவு வாயில் அருகே, பிரம்மாண்டமான மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிவதைக் கண்டு அங்கிருந்த…

48 minutes ago

“புது குழந்தை பெத்துட்டு உன்னை தூக்கி எறிவேன்…” கணவரை பழிவாங்க 3 வயது மகனை சித்திரவதை செய்த தாய்…. இணையத்தில் தீயாய் பரவும் சர்ச்சை வீடியோ….!!

ரஷியாவில் 31 வயதான தாய் ஒருவர், தனது சொந்தச் சிறுவனிடம் "உன் தந்தை உன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார்.…

57 minutes ago