உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, அந்த பெண் கடந்த 2019-ம் ஆண்டு தான் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தனது கணவரிடம் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
அப்பெண் மைனராக இருந்தபோது, அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த தர்ஷத் பட்டேல் (வயது 60) என்ற முதியவர், அவரை மிரட்டிப் பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பயம் காரணமாக இந்த கொடுமையை இத்தனை ஆண்டுகளாக யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்ததாக அந்த பெண் தனது கணவரிடம் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், தனது மனைவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எப்படியாவது நீதி கிடைக்க வேண்டும் என்று உறுதியுடன் முடிவு செய்தார். உடனடியாக இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தர்ஷத் பட்டேல் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள முதியவரை விரைவில் கைது செய்வோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு யலஹங்காவில் 13 வயது சிறுவன் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாஸ்கர் ரெட்டி…
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான கட்டுமான மேற்பார்வையாளர் கிஷோர் தனாக், தனது 5 வயது மகளைக்…
ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், தர்மவரத்தின் சிவ்நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்வலத்தின்…
புனே-சதாரா நெடுஞ்சாலையில் போர் தாலுகாவிற்கு உட்பட்ட கிக்வி பகுதியில், கவனக்குறைவாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பினாக் சைலேந்திர…
ஹல்தவானி கம்லுவாகஞ்சா சாலையில் கடந்த செப்டம்பர் 14 அன்று மாலையில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. செவிலியர் பயிற்சி மாணவியான…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…