Categories: சினிமா

“எங்க ஏரியா உள்ள வராதா”.. ஒவ்வொரு வாரமும் TRP-யில் டாப் 5 இடங்களை விட்டு கொடுத்தகாத.. சன் டிவி சீரியல்களின் லிஸ்ட்.!

Spread the love

பொதுவாக சன் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. ஏனென்றால் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை மக்களுக்கு எந்த மாதிரியான கதைக்களத்தை கொடுத்தால் மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்றதற்கு ஏற்றது போல சன் டிவியில் உள்ள சீரியல்கள் அனைத்தும் வந்து கொண்டிருக்கிறது. அதனால் சன் டிவியில் சுமார் 19 சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அடுத்தடுத்த சீரியல்களும் வரிசை கட்டி காத்திருக்கின்றன. அதன்படி காலையில் மட்டும் 11 சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவரும் அனைத்து சீரியல்களையும் விரும்பி பார்க்கின்றனர்.

இருந்தாலும் டிஆர்பி ரேட்டிங் பொருத்தவரையில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்கள் தான் அதிக புள்ளிகள் பெற்று டாப் இடத்தை பிடிக்கின்றது.  என்னதான் சன் டிவி சீரியல்களுக்கு போட்டியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் டப் கொடுத்தாலும் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடங்களை பிடிப்பது சன் டிவி சீரியல்கள் ஆக தான் உள்ளன. அப்படி டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடங்களை தொடர்ந்து பிடிக்கும் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சிங்க பெண்ணே:

ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் தான் சிங்க பெண்ணே. அதனைப் போலவே டிஆர்பி ரேட்ங்கில் எப்படியாவது தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னை வந்து கார்மெண்ட்ஸ் யில் வேலை செய்து கொண்டிருக்கிறார் ஆனந்தி. இவர் அன்பு என்பவரை காதலிக்க ஆனந்தியை ஓனர் காதலிக்கிறார். ஒரு வழியாக ஆனந்தி மற்றும் அன்பு காதல் தெரிய வர தற்போது ஆனந்தி கர்ப்பமாக இருக்கின்றார். இனி அவர் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டுதான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

மூன்று முடிச்சு:

ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 லிஸ்டில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை பிடிக்கக் கூடிய சீரியல் தான் மூன்று முடிச்சு. இந்த சீரியலில் சுவாதி நாயகியாகவும், இவருக்கு ஜோடியாக நியாஸ் ஹீரோவாகவும் நடிக்கிறார்கள். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் நந்தினி மற்றும் சூர்யா திருமணத்தால் சூர்யா அம்மா பயங்கர கோபத்தில் இருக்கின்றார். இனி அவர் என்ன செய்வார் என்ற கதைக்களத்தை நோக்கி தான் சீரியல் நகர்கிறது.

கயல்:

கடந்த சில வருடங்களாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள சீரியல் தான் கயல். தனது குடும்பத்திற்காக எல்லா சந்தோஷத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் இந்த கயல் சீரியல். அடுத்தடுத்து கையெழுத்து பல தொந்தரவுகள் வந்த நிலையில் தற்போது கயலின் திருமண வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை கொண்டு இந்த தொடரை ஒளிபரப்பாகி வருகிறார்கள்.

மருமகள்:

புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் என்றாலும் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்து வருகிறது. இந்த சீரியல் கடந்த ஆண்டு இறுதியில் சன் டிவியில் தொடங்கப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சீரியலில் பிரபு மற்றும் ஆதிரை திருமணம் முடிந்தது. அதன் பிறகு அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் தான் விறுவிறுப்பாக செல்கிறது.

அன்னம்:

சன் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல் தான் அன்னம். அப்பா அம்மாவை இழந்த ஒரு பெண் தனது தாய்மாமன் உறவால் வாழ்ந்து வருகிறார். அன்னத்திற்கு அவரது தாய் மாமன் தனது மூத்த மகன் சரவணனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அந்த ஏற்பாடுகளை செய்கிறார். திருமண எபிசோடும் பரபரப்பாக செல்ல கடைசியில் அன்னத்திற்கு கார்த்திக் என்பவர் உடன் திருமணம் நடந்து முடிகிறது. இனி அவர் வாழ்க்கையில் சந்திக்க போகும் இன்னல்கள் குறித்த கதை தான் இந்த சீரியல். இந்த சீரியலும் டிஆர்பி யில் டாப் 5 இடத்தில் இடம் பிடித்து வருகிறது.

Nanthini

Recent Posts

அடச்சீ… காதலனுடன் சுற்ற சொந்த மாமா வீட்டிலேயே… 5 லட்சம் நகை கொள்ளை… உல்லாச விடுதியில் ஜாலியாக… இருந்த காதலி அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!

தன் காதலனுடன் ரெஸ்டாரண்ட், ஹோட்டல் மற்றும் மால் போன்ற இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்க்கக் கையில் பணமில்லாமல் தவித்த இளம்பெண் ஒருவர்,…

41 seconds ago

அடப்பாவி… காதலிக்கு பிறந்தநாள் கிஃப்ட் ஐபோனா?… இல்ல ஜெயிலா?… 12 கிலோ கஞ்சாவுடன் பைக்கில் பறந்த… இளம் ஜோடிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

இளம் ஜோடியினர் ஒடிசாவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த…

11 minutes ago

“ஒரு பைசா கூட விடல…” சேற்றில் புதைந்த லட்சக்கணக்கான ரூபாய் பணம்…! உரியவரிடம் ஒப்படைத்த மீட்பு குழு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

நேபாள நாட்டில் வரலாறு காணாத பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஒட்டுமொத்த தேசமே பெரும் துயரத்திலும் பேரழிவிலும் மூழ்கியுள்ளது. ஆயிரக்கணக்கான…

15 minutes ago

“சீனியர்களுக்கு நோ… செந்தில் பாலாஜிக்கு மட்டும் எஸ்”…. ஸ்டாலின் கொடுத்த ‘ஸ்பெஷல் ஆஃபர்’…. அறிவாலயத்தில் வெடித்த ரகசிய பிளான்….!

திமுகவில் கட்சி அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் தீவிர மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும்…

19 minutes ago

“”மயக்கத்தில் கணவன்… அறையில் கேட்ட சத்தம்…” திருமணமான 13 நாட்களில் புதுப்பெண் செய்த காரியம்…. அழுது மன்னிப்பு கேட்டு… அதிர்ச்சி சம்பவம்…!!

திருமணமான வெறும் 13 நாட்களிலேயே புதுப்பெண் ஒருவரின் அதிர்ச்சி தரும் கள்ளத்தொடர்பு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புதுமனைவி தனது கணவனின்…

25 minutes ago