தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்று பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர் தான் எம்ஜிஆர். இவர் அரசியலிலும் கலக்கினார். முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் எம்ஜிஆர் இருந்தார். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட இந்த கட்சியில் இருந்து கொண்டு மூகாம்பிகை கோவிலுக்கு சென்றது, மருதமலை கோவிலுக்கு சென்றது என்று எம்ஜிஆர் கட்சியில் சில சலசலப்புகளை சந்தித்து இருந்தாலும் படப்பிடிப்பில் சக நடிகையின் மூலமாக ஒரு சம்பவத்தை எதிர்கொண்டார். நாடக நடிகரான எம்ஜிஆர் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக தான் துணை நடிகராக சினிமாவில் நுழைந்தார்.
அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் துணை நடிகர்கள் மற்றும் இரண்டாவது நாயகன் என அழைத்து வந்த எம்ஜிஆர் 10 ஆண்டு இடைவேளைக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்தில் இவருடன் நடிக்க முடியாது என்ற சில நடிகைகள் மறுத்த சம்பவமும் பல நடந்து உள்ளது. பல தடைகளை கடந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட எம்ஜிஆர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தனக்கு என்று தனிமுத்திரையை பதித்தார். இவர் முதல் படமான நாடோடி மன்னன் என்ற படத்தை இயக்கி தயாரித்த நிலையில் பெரிய வெற்றியை பெற்று தந்தது. அடுத்தடுத்து பல வெற்றிகளை கொடுத்த எம்ஜிஆர் தன்னுடைய படங்கள் தொடர்பான முடிவை தானே எடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்.
எம்ஜிஆருக்கு மிகவும் தீவிரமான ரசிகர்கள் இருந்தனர். அவரை அனைவரும் வாழும் கடவுளாகவே பார்த்தனர். அதனால் எம்ஜிஆர் மூன்று முறை தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக இருந்தார். தன்னால் முடிந்த வரை பல ஏழை மக்களுக்கும் உதவி செய்தார். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர காரணமாக இருந்தவர் எம்ஜிஆர் என்று தான் சொல்ல வேண்டும். எம்ஜிஆருக்கு ஏதாவது என்றால் ரசிகர்கள் பொங்கி விடுவார்கள். அப்படிதான் 60 காலகட்டத்தில் குடும்பப் பாங்கான படங்களை இயக்கி பிரபலமாக இருந்த கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடித்த வெளியான பணமா பாசமா என்ற திரைப்படம் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய தியேட்டர் ஆன மதுரை தங்கம் தியேட்டரில் 100 நாட்கள் ஓடி வசூலை அள்ளியது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய கே எஸ் கோபாலகிருஷ்ணன், இந்த படம் வசூல் சக்கரவர்த்திகளின் படங்களின் வசூலை முறியடித்து விட்டது என எம் ஜி ஆர் ஐ மறைமுகமாக தாக்கி பேசினார். பேசிவிட்டு வெளியே வந்து பார்த்தபோது அவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த கே எஸ் கோபாலகிருஷ்ணன் இது பற்றி தங்கம் தியேட்டர் அதிபரிடம் முறையிட அவரோ மதுரையில் எம்ஜிஆர் ரசிகர்கள் தான் அதிகம். அவரின் பட போஸ்டரை பார்த்தாலே கையில் இருக்கும் பீடியை மறைத்துக் கொள்வார்கள். அந்த அளவிற்கு மரியாதை கொடுக்கும் ரசிகர்கள் எம்ஜிஆரை நீங்கள் தாக்கி பேசினால் சும்மா விடுவாங்களா, பத்திரமா வீட்டுக்கு போங்க என்று சொல்லி அனுப்பி வைத்தாராம்.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…