சன் டிவி சீரியல் காதல் ஜோடிக்கு பிரம்மாண்டமாக நடந்த திருமணம்.. வைரலாகும் வெட்டிங் பிக்ஸ்..!!

By Priya Ram

Published on:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சுந்தரி சீரியலில் நடிகர் அரவிஷ் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.சுந்தரி சீரியல் முதல் பாகத்திலும் இவர் நடித்தார். சுந்தரி சீரியல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

   

கடந்த ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான திருமகள் சீரியலில் ஹரிகா என்பவர் கதாநாயகியாக நடித்தார். இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் செய்திகள் வெளியானது.

சமீப காலமாக சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வரிசையில் தற்போது அரவிஷுக்கும் ஹரிக்காவுக்கும் இன்று பிரம்மாண்டமாக இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமண நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இது குறித்த வீடியோவை அரவிஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் அரவிஷ் ஹரிக்கா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aravish Glitzy (@aravish_glitzy)

author avatar
Priya Ram