Connect with us

2 முறை அபார்ஷன் ஆகியிருக்கு… 10 வருஷத்துக்கு அப்றமா இப்ப pregnant ஆ இருக்கேன்… பிரபல சீரியல் நடிகை உருக்கம்…

CINEMA

2 முறை அபார்ஷன் ஆகியிருக்கு… 10 வருஷத்துக்கு அப்றமா இப்ப pregnant ஆ இருக்கேன்… பிரபல சீரியல் நடிகை உருக்கம்…

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த  சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக வில்லிகளும் இணையத்தில் பிரபலம் தான். அப்படி பல சீரியல்களில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜூலி. இவர் சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஒரு டான்ஸர் என்பதும் குறிப்பிடத்தக்கது. டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜோடி நம்பர் 1, மானாட மயிலாட போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கலக்கியவர் நடிகை ஜூலி. இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு துணை இயக்குனர் மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். துணை இயக்குனராக பணியாற்றி வரும் இவர், விரைவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக அவரே சமீபத்தில் கூறியும் இருந்தார்.

   

 

தற்போது இவர் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது, ‘நான் இப்போ கர்ப்பமாக இருக்கிறேன். இந்த குழந்தை எங்க ரெண்டு பேருக்கும் ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா திருமணம் ஆகி பத்து வருஷம் ஆயிடுச்சு நான் முதல்முறையாக கர்ப்பமானேன். அது அபார்ட் ஆயிடுச்சு இரண்டாவது முறையாக கர்ப்பமான போது கர்ப்பப்பை டியூப்பில் பேபி பார்ம் ஆனதால அபார்ட் பண்ண வேண்டியது ஆயிடுச்சு.

இப்ப மூன்றாவது முறையா கர்ப்பமா இருக்கிறேன். இதற்கான டெஸ்ட் எடுத்து கொடுத்துட்டு ரிசல்ட் வர்ற வரைக்கும் நாங்க ரெண்டு பேருமே ரொம்ப பயந்துட்டு தான் இருந்தோம். பிறகு ரிசல்ட்டில் குழந்தைதான்னு கன்ஃபார்ம் பண்ணினதும் ஹாஸ்பிடலே அழுதுட்டேன்.  எனக்கு இப்போ 42 வயது ஆகிடுச்சு. அதனால நான் எல்லாருக்கும் ஒரே ஒரு அட்வைஸ் தான் சொல்லுவேன். சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டா சீக்கிரமே குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள். வேலை எப்போ வேணாலும் கிடைக்கும். அதுக்காக எல்லாம் குழந்தை பிறப்பை தள்ளி போடாதீங்க’ என உருக்கமாக கூறியுள்ளார் . இதோ அந்த வீடியோ…

Continue Reading
To Top