தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, பிற தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் ஜோசப் விஜய். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் காரசாரமான கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய்யுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.டி. நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் திறம்படப் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில், இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக பட்ஜெட் மற்றும் நிதிநிலை குறித்த விவாதங்கள் சூடுபிடித்த வேளையில், நிதியமைச்சரின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சட்டசபையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ‘மர்மயோகி’ திரைப்படத்தில் ‘குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறாவிட்டால் குறியே வைக்க மாட்டேன்’ என்ற புகழ்பெற்ற வசனம் வரும். அதை அரசியல் களத்தில் நிஜமாக்கிக் காட்டியவர் நம் முதலமைச்சர் விஜய் அவர்கள் தான்” என்று நெகிழ்ச்சியோடு பஞ்ச் வசனத்தைப் பேசினார். நிதியமைச்சரின் இந்தப் பேச்சைக் கேட்டுப் பேரவையில் இருந்த உறுப்பினர்கள் கரவொலி எழுப்ப, முதலமைச்சர் விஜய்யும் அதை முகமலர்ச்சியோடு சிரித்து ரசித்தார். வழக்கமாக விவாதங்களால் புயல்வீசும் சட்டமன்றத்தில், இந்த சுவாரஸ்யமான தருணம் நெகிழ்ச்சியையும் கலகலப்பையும் ஏற்படுத்தியது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில், தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடு வரும் 19 மற்றும்…
ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்காக மின்சார காரை ஓட்டி வரும் பெண் ஒருவர், தனது காரை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தியிருந்த…
தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று…
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உயிரை விரைவாகக் காக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மற்றும் கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது…
ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன் மற்றும் பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியரான 42 வயதான ராபின் சிங்…