தனது ஸ்டைலில் மன்னிப்பு கேட்டு சரண்டரான மன்சூர்.. பதிலுக்கு திரிஷா என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க …

By Begam on கார்த்திகை 24, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் மன்சூர் அலிகான், தனது வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதன் மூலம் அவர் தற்போது இந்திய அளவில் பிரபலமாகியும் உள்ளார். அதாவது நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் திரிஷாவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியது நாம் அனைவரும் அறிந்ததே. பிரபல வில்லன் நடிகராக வலம் வரும் நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

actor Mansoor Ali Khan

   

இத்திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவும் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி ஆபாசமாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாக ரசிகர்களும் பிரபலங்களும் என  பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால் ஒரு சில நடிகர் மன்சூர் அலி கானுக்கு ஆதரவாகவும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் நடிகர் மன்சூர் அலி கானை விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது.

   

Mansoor Alikhan

 

இப்படி தொடர்ந்து மன்சூர் அலிகான் திரிஷா விவகாரம் இணையத்தில் வைரலாக  மாறியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி பேசியது தவறுதான் என்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் கூற, ஆனால் மன்சூர் அலிகான் விடாப்படியாக என்னால் மன்னிப்பு கேட்கவே முடியாது என்று இருந்தார்.  ஆனால் தொடர்ந்து பிரச்சினைகள் கிளம்பியதால் மன்சூர் அலிகானுக்கு வேறு வழி இல்லை மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.


அதனால் அவர் தனது ஸ்டைலில் ‘ என் சக திரை நாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு’ என்று நீண்ட பதிவு வெளியிட்டு மன்னிப்பு கேட்டார். இதைத்தொடர்ந்து நடிகை த்ரிஷா தனது இணையதள பக்கத்தில் ‘ தவறு செய்வது மனித குணம். மன்னிப்பது தெய்வ குணம்’ என்று பதிவு செய்து கையெடுத்து கும்பிடும் மாதிரி ஒரு எமோஜியை போட்டு இந்த சர்ச்சைக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்து விட்டார். எப்படியோ ஒருவழியாக பிரச்சனை முடிவுக்கு  வந்து விட்டது.  இந்த சர்ச்சை பத்தி நீங்க என்ன நெனைக்குறீங்கன்னு கமெண்ட் ல சொல்லுங்க.