பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் பெயர்களில் ரசிகர்கள் போலி கணக்குகளை தொடங்குவது என்பது வழக்கம் தான். ஆனால் இங்கு ஒரு நடிகையே தனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் 2013 ஆம் ஆண்டு இஷாக் என்கின்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் அமேரா தஸ்துர்.
இவர் தமிழில் 2015 ஆம் ஆண்டு கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவான அனேகன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் வெளியானதை தொடர்ந்து பிரபுதேவா நடித்த பகிரா என்கின்ற திரைப்படத்திலும் நடித்தார். தமிழ் சினிமாவில் அந்த அளவு திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய அமேரா தஸ்துர், அவபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். இவரது புகைப்படங்களை பார்த்த பலரும் எதிர்மறையான கருத்துக்களையும், கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இதுபோன்ற நெட்டிசன்களை சமாளிப்பதற்காக புத்திசாலித்தனமாக யோசித்த அமேரா தஸ்துர் யாரும் செய்யாத ஒரு காரியத்தை செய்திருக்கின்றார்.
அதாவது போலி கணக்குகளை தொடங்கி அந்த கணக்கு மூலமாக அவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்திருக்கிறார். தனது கணக்குகள் மூலமாக பதிலளித்தால் பிரச்சனை ஆகிவிடும் என்பதற்காக போலி கணக்குகளை தொடங்கி தன்னை கேலி செய்யும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது எத்தனை நாட்களுக்கு தான் பொறுமையாக இருப்ப,து ஒரு கட்டத்தில் எல்லை மீறினால் நாமும் அவர்களுக்கு பதில் அடி கொடுக்க தான் வேண்டும் என்று கூறி இருக்கின்றார். இதை பார்த்த பலரும் இவரின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் இதையே நாங்கள் செய்தால் சில்லறை தனமான வேலை என்று கூறுகிறீர்கள். அதுவே அவர்கள் செய்தால் புத்திசாலித்தனமா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.