Categories: சினிமா

ரீரிலீஸிலும் விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் அஜித்! மே 1 ஆம் தேதி அந்த வேற லெவல் தல படம் மறுபடியும் இறங்கப்போகுது?

Spread the love

கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் மாஸ் ஹிட் அடித்த “கில்லி” திரைப்படம் கடந்த 20 ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட்டது. இத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும் ரசிகர்கள் பலரும் “கில்லி” ரீரிலீஸிற்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்துள்ளனர்.

திரையரங்கு உரிமையாளர்களே மிரண்டு போகும் அளவுக்கு ஹவுஸ்ஃபுல் காட்சிகளால் “கில்லி” ரீரிலீஸ் நிரம்பி வழிகிறது. இத்திரைப்படம் முதன்முதலில் திரையரங்குளில் வெளியானபோது பார்க்க தவறிய 2K கிட்ஸ்கள் இந்த ரீரிலிஸிற்கு படையோடு கிளம்புகின்றனர்.

இந்த நிலையில் “கில்லி” ரீரிலீஸிற்குப் போட்டியாக அஜித்குமாரின் மாஸ் ஹிட் திரைப்படம் ஒன்று ரீரிலீஸ் ஆக உள்ளதாம். அதாவது வருகிற மே 1 ஆம் தேதி அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு “மங்காத்தா” திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

“மங்காத்தா” திரைப்படம் அஜித்குமாரின் 50 ஆவது திரைப்படமாகும். இத்திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்தது. இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

அஜித்குமார் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. “மங்காத்தா” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் “மங்காத்தா 2” குறித்து எந்த வித தகவலும் வெளிவரவில்லை. இந்த நிலையில் “மங்காத்தா” திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Arun

Recent Posts

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

2 minutes ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

9 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

17 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

24 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

1 மணத்தியாலம் ago

அப்படி போடு… பெரம்பூர் மக்களே ரெடியா?… புகார் கொடுத்த சில நொடிக்ளிலயே தீர்வு… மக்களுக்காக அதிரடி முடிவெடுத்த முதல்வர் விஜய்… பெரம்பூர் தொகுதிக்கு வந்த புதிய அதிரடி மாற்றம்…!

சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…

1 மணத்தியாலம் ago