தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து வரும் செல்வப் பெருந்தகை தற்போது மாற்றப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவும் செய்தி திமுக கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. சமீபகாலமாகவே மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை தீவிரமாக முன்வைத்து வருவது திமுக தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது.
இப்படியான நிலையில் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக இருக்கும் மாணிக்கம் தாகூர் தலைவரானால் திமுக மற்றும் காங்கிரஸ் உறவில் புதிய மாற்றங்கள் ஏற்படும். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகளை சரி செய்வதற்காக மேலிடம் இந்த மாற்றத்தை திட்டமிடுவதாக தெரிகிறது.. இருந்தாலும் செல்வபெருந்தகையை பதவியில் இருந்து நீக்கினால் அது சமூக ரீதியிலான விவாதங்களை உருவாக்கும் என்பதால் காங்கிரஸ் மேலிடம் மிகவும் கவனமாக ஆலோசித்து வருகிறது. இந்த தலைமை மாற்றம் உறுதியானால் வருகின்ற பொங்கலுக்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியாகும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…