தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்… “இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது” என அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை.!!

Spread the love

கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘மை ஸ்ட்ரேஞ்ச் அடிக்‌ஷன்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவரது இந்த விசித்திரப் பழக்கம் வெளிச்சத்திற்கு வந்தது. ஆரம்பத்தில் பெட்ரோலின் வாசனையை மட்டும் முகர்ந்து பார்த்து வந்த ஷானன், நாளடைவில் அதற்கு முற்றிலும் அடிமையாகி அதை குடிக்கவும் தொடங்கியுள்ளார்.

ஷானன் தினமும் காலையில் எழுந்தவுடன் டீ, காபிக்கு பதிலாக பெட்ரோல் குடிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு நாளில் பலமுறை பெட்ரோல் குடிக்கும் இவர், இரவு தூங்குவதற்கு முன்பும் அதை குடிக்கிறார். பெட்ரோல் குடிக்கும் போது தனது நாக்கில் ஒருவித நடுக்கமும், தொண்டையில் கடுமையான எரிச்சலும் ஏற்படுவதாகக் கூறும் ஷானன், மன அழுத்தமோ அல்லது தனிமையோ உணரும் போதெல்லாம் தனக்கு அமைதி கிடைப்பதற்காக பெட்ரோல் குடிப்பதாகத் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் இவரைத் தடுக்க முயன்றாலும், அவர்களுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக பெட்ரோலை வாங்கி இவர் குடித்து வருகிறார்.

மருத்துவ நிபுணர்கள் இந்த பழக்கம் மிகவும் அபாயகரமானது என்று எச்சரித்துள்ளனர். பெட்ரோல் என்பது மனித உடலுக்குள் செல்லக் கூடாத ஒரு நச்சு இரசாயனம் என்பதால், இது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மூளையை கடுமையாகப் பாதித்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மனநல நிபுணர்களின் கூற்றுப்படி, இது வெறும் பழக்கம் மட்டுமல்ல, ‘பிகா டிஸார்டர்’ எனப்படும் ஒரு அரிய வகை மனநலக் குறைபாடாகும். இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு மனித உடலுக்குத் தேவையில்லாத மண், சாக்லேட், பெயிண்ட் அல்லது பெட்ரோல் போன்ற நச்சுப் பொருட்களை உட்கொள்ளும் தீவிரமான ஆசை ஏற்படும் என்று விளக்கமளித்துள்ளனர்.

Swetha

Recent Posts

பேரப்பிள்ளைகள் சொன்னாங்கன்னு ஓட்டுப் போடுறதா.? ஜனநாயகம் வேடிக்கையாகிடுச்சு… ஜனநாயகத்தை வெளுத்து வாங்கிய சீமான்..!!

பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…

41 minutes ago

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை கடையடைப்பு.. தமிழகத்தில் 5,000 கடைகள் இயங்கும்..!!

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…

48 minutes ago

BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…

50 minutes ago

“லேட்டா வந்தா அவ்ளோதான்”.. முதலமைச்சர் விஜய்யின் ‘பங்ச்சுவாலிட்டி’ உத்தரவால் பரபரப்பு.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!!

தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…

1 மணத்தியாலம் ago

நீதி எங்கே போகிறது? சிறையில் இருந்து வந்த பாலியல் கைதிக்கு ஹீரோ ரேஞ்சுக்கு வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்: வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…

1 மணத்தியாலம் ago

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்திருக்கீங்களா..? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு… செம குட் நியூஸ்..!!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிக விரைவில் கார்டுகள் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என…

1 மணத்தியாலம் ago