நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு இயற்கையின் சிறப்பான சக்திகள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் மின்னல். மற்ற சக்திகளை போலவே இல்லாமல் அவ்வளவு எளிதாக அதை யாராலும் கணிக்கவே முடியாது. மின்னல் தாக்கப்பட்ட பிறகு அந்த இடத்தில் ஒரு புல் கூட இருக்காது. அனைத்துமே கருகிவிடும். ஆனால் ஒரு மனிதர் பல தடவை மின்னல் தாக்கி அவருக்கு எதுவும் ஆகவில்லை என்ற வரலாறு இருக்கிறது. வருட வாழ்நாளில் மின்னல் தாக்கும் வாய்ப்புகள் பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு மட்டும் தான் இருக்கும். இருந்தாலும் அமெரிக்காவின் வர்ஜினீயாவை சேர்ந்த ஒருவருக்கு மின்னல் என்பது நெருங்கிய நண்பர் போல ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருடைய வாழ்க்கையில் வழக்கமாக ஒரு நிகழ்வாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னாள் அமெரிக்க பார்க் ரேஞ்சரான ராய் சல்லிவன் 35 வருடங்களில் ஏழு முறை மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார். மிகவும் வினோதமான இவர் உலக சாதனையாளராகவும் பார்க்கப்படுகிறார். பல முறை மின்னல் தாக்கியலுக்காக இவருடைய கதையில் யாராலும் நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் இருக்கிறது. மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியதால் சக ரேஞ்சர் அவரை ஸ்பார்க் ரேஞ்சர் என்று குறிப்பிடுகிறார்கள். முதன்முதலாக 1942 ஆம் வருடம் வர்ஜினியாவில் உள்ள தேசிய பூங்காவில் இவர் வேலை செய்து கொண்டிருந்த பொழுது எரியும் கண்காணிப்பு கோபுரத்திலிருந்து தப்பிக்கும் போது மின்னல் தாக்கியதில் அவருடைய வலது காலில் காயம் வந்தது.
மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட தீக்காயங்கள் பெருங்கால் விரலை மட்டுமே இழக்க நேரிட்டுள்ளது. இதுதான் இவருடைய மின்னல் வரலாற்றில் ஆரம்பம். இப்படி அடுத்தடுத்த ஏழு முறை இப்படி ஆபத்து நிலையில் இருந்து மீண்டு வந்த இவர் 1983 ஆம் வருடம் 71 வயதில் இயற்கை மரணம் அடைந்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…