பொதுவாகவே தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்களுக்கு தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும். ஏனென்றால் காலகட்டத்திற்கு ஏற்றவாறு மக்களை கவரும் வகையில் புதுப்புது கதைக்களத்துடன் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன. ஒரு கட்டத்தில் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியலை களமிறக்கிய நிலையில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவியும் களமிறங்கியுள்ளது.
அதேசமயம் விஜய் டிவி பழைய சீரியல்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து புதுப்புது சீரியல்களையும் தொடர்ந்து பலமுறைக்கு வருகிறது. அதன்படி தற்போது விஜய் டிவியில் ஒரு சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி முதல் விஜய் டிவியில் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த புதிய தொடர் தான் பொன்னி. இந்த தொடரில் கதாநாயகனாக நடிகர் சபரிநாதனும் கதாநாயகியாக வைஷ்ணவி சுந்தரம் நடித்து வந்தனர் சில நாட்களாகவே சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் 663 எபிசோடுகளுடன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து பொன்னி சீரியலுக்கு பதிலாக புதிய சீரியலை விஜய் டிவி களமிறக்கி உள்ளது. அதன்படி தென்றலே மெல்ல பேசு என்ற புதிய சீரியலை தற்போது விஜய் டிவி தொடங்கியுள்ளது. இனி 2.30 மணிக்கு தென்றலை மெல்ல பேசு என்ற புதிய சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். வித்தியாசமான கதைக்களத்துடன் இந்த சீரியல் தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் அக்ஷிதா தனது படுக்கையில் வைத்திருந்த நாப்கினைப் பார்த்த டிடிஎஃப் வாசன், அதன் அளவைக் குறித்து அவரிடம்…
திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக இருந்தவர், நடிப்பின் மீதான தணியாத ஆர்வத்தால் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று,…
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனி இடம்பிடித்த நாட்டுப்புறக் கலைஞரும், நடிகையுமான தாமரைச் செல்வி தனது இரண்டாவது…
புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் சாலையோரம் தண்ணீர் விற்றுக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவன், அடையாளம் தெரியாத நபரால் திடீரெனக் காரில் கடத்தப்பட்டான்.…
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் உயிரியல் பூங்காவில் குடும்பத்தினருடன் சென்றிருந்த மூன்று வயது சிறுவனை, கற்றல் குறைபாடு கொண்ட ஒரு நபர் திடீரென…
பிக்பாஸ் புகழ் ஜூலி தனது கர்ப்ப காலம் குறித்து சமூக வலைதளங்களில் வக்கிரமான முறையில் விமர்சனம் செய்பவர்களுக்கு எதிராக இன்ஸ்டாகிராம்…