பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனி இடம்பிடித்த நாட்டுப்புறக் கலைஞரும், நடிகையுமான தாமரைச் செல்வி தனது இரண்டாவது கணவர் பார்த்தசாரதியைப் பிரிந்துவிட்டதாக வெளியாகி உள்ள தகவல் சின்னத்திரை வட்டாரத்திலும் அவரது ரசிகர்களுக்கும் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசனில் தனது எதார்த்தமான பேச்சாலும், வெளிப்படையான குணத்தாலும் லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த தாமரைச் செல்வி, அதனைத் தொடர்ந்து ‘சின்ன மருமகள்’ சீரியல் மற்றும் பல திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தனது கணவர் பார்த்தசாரதியுடன் இணைந்து ‘பிபி ஜோடிகள்’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அன்யோன்யமாக வலம் வந்த இவர், தற்போது அவரைப் பிரிந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பார்த்தசாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இதற்குக் காரணமாக அமைந்த நிலையில், தாமரைச் செல்வியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த கணவரின் பெயரான ‘தாமரைச்செல்விசாரதி’ என்பதை மாற்றி ‘தாமரைச்செல்விகோபால்’ எனப் பெயர் மாற்றியுள்ளது இந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எனினும், கணவரின் புகைப்படங்களை அவர் நீக்கவில்லை என்பதும், இது குறித்து தாமரைச் செல்வி தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தனை நாள்கள் மிகச் சிறந்த ஜோடியாகக் கருதப்பட்ட இவர்களுக்குள் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்ன என்பது குறித்து ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தத்தையும் குழப்பத்தையும் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாகாடி சாலை, பின்னூப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி ஜூவல்ஸ் என்ற நகைக் கடையில், வாடிக்கையாளர் போல்…
பிக் பாஸ் வீட்டில் அக்ஷிதா தனது படுக்கையில் வைத்திருந்த நாப்கினைப் பார்த்த டிடிஎஃப் வாசன், அதன் அளவைக் குறித்து அவரிடம்…
திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக இருந்தவர், நடிப்பின் மீதான தணியாத ஆர்வத்தால் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று,…
புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் சாலையோரம் தண்ணீர் விற்றுக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவன், அடையாளம் தெரியாத நபரால் திடீரெனக் காரில் கடத்தப்பட்டான்.…
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் உயிரியல் பூங்காவில் குடும்பத்தினருடன் சென்றிருந்த மூன்று வயது சிறுவனை, கற்றல் குறைபாடு கொண்ட ஒரு நபர் திடீரென…
பிக்பாஸ் புகழ் ஜூலி தனது கர்ப்ப காலம் குறித்து சமூக வலைதளங்களில் வக்கிரமான முறையில் விமர்சனம் செய்பவர்களுக்கு எதிராக இன்ஸ்டாகிராம்…