தமிழக அரசியலில் நடிகர் விஜய்யைத் தொடர்ந்து, தற்போது நடிகர் தனுஷின் அரசியல் பிரவேகம் குறித்த பேச்சுகள் தீவிரம் அடைந்துள்ளன. சமீபத்திய ரசிகர் மன்ற விழாவில் “நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்” என்று தனுஷ் பேசியது இந்த ஊகங்களுக்கு வலு சேர்த்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக மாற்றப்பட்டு, தமிழகம் முழுவதும் புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தச் சூழலில், சமீபத்தில் தனுஷ் டெல்லி சென்றது குறித்த பின்னணித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தனுஷ் தரப்பு அதிமுக மேலிடத்தைத் தொடர்பு கொண்டு கட்சியில் இணைய விரும்புவதாகவும், தங்களுக்கு இணைப்புப் பொதுச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்றும் கோரியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தனுஷை அதிமுகவுடன் இணைக்க டெல்லி தரப்பில் சில சக்திகள் விரும்பியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எடப்பாடி பழனிசாமி இந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டதால், அந்த முயற்சி தற்காலிகமாகத் தடைபட்டதாகத் தெரிகிறது. இதனால் தனது அடுத்த கட்ட அரசியல் பயணம் குறித்து தனுஷ் குழப்பத்தில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனைத் தொடர்ந்து, டெல்லி சென்ற தனுஷ் அங்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகச் செய்திகள் கசிந்துள்ளன. தனிக்கட்சி தொடங்குவதா அல்லது அதிமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதா என்பது குறித்து அவர் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசித்து வருவதால், தமிழ்நாட்டு அரசியலில் அடுத்தடுத்து என்ன மாற்றங்கள் நிகழப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆந்திராவின்…
நடிகர் தனுஷின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், சென்னை ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில்…
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், தங்களது பணி மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட தனிப்பட்ட…
தமிழக வெற்றிக் கழகத்தில் பரப்புரைச் செயலாளராகச் செயல்பட்டு வரும் நாஞ்சில் சம்பத், கட்சியின் தலைமை மீதும் அண்மையில் பொறுப்புக்கு வந்த…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரையில் அமைந்துள்ள தமது இல்லத்தில் இருந்து நாள்தோறும் தலைமைச்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு உறங்கச் சென்ற ஹேமாவதி என்ற ஏழு வயதுச் சிறுமி மறுநாள்…