மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் காரணமாக அமெரிக்காவில் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வரும் நவம்பர் 3-ம் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விலை உயர்வு ஆளும் டொனால்ட் டிரம்ப் கட்சியின் வேட்பாளர்களின் வெற்றியை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க வேறு வழியின்றி ரஷ்யாவுடன் திடீர் ஒப்பந்தம் மேற்கொண்ட டிரம்ப், முதற்கட்டமாக ரஷ்யாவின் பிரிமோர்ஸ்க் துறைமுகத்தில் இருந்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை அமெரிக்காவிற்கு வரவழைத்துள்ளார். மால்டா நாட்டின் கொடியுடன் ‘அகியோய் ஃபானெண்டஸ்’ என்ற கப்பலில் புறப்பட்டுள்ள இந்த டீசல் ஏற்றுமதி, வரும் நவம்பர் 7-ம் தேதி அமெரிக்காவைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீதான போர் காரணமாக கடந்த 2022-ல் ஜோ பைடன் நிர்வாகம் ரஷ்ய பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதிக்கு முழுத் தடை விதித்தது. டிரம்ப் அதிபரான பிறகும் தொடர்ந்த இந்தத் தடை, உள்நாட்டில் அதிகரித்து வரும் டீசல் விலையைக் கட்டுப்படுத்தும் கட்டாயத்தால் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 9-ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, ரஷ்யா உடனடியாக 3 இலட்சம் மெட்ரிக் டன் டீசலை வழங்குவதுடன், நவம்பரில் 5 இலட்சம் டன்களும், அதைத் தொடர்ந்து 1 மில்லியன் டன்களும் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, ரஷ்யா தனது டீசலை துருக்கி, பிரேசில், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கே முக்கியமாக ஏற்றுமதி செய்து வந்தது. தற்போது அமெரிக்காவிற்கும் டீசல் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதால் சர்வதேச எரிசக்தி வர்த்தகத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேவை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ரஷ்யா தனது டீசல் ஏற்றுமதியை இந்த ஆண்டு இறுதிக்குள் மாதத்திற்கு 3 முதல் 3.5 மில்லியன் டன்கள் வரை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தம் உலக அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் பிற நாடுகளைக் கண்டித்து வந்த அமெரிக்கா, தற்போது தனது நாட்டின் தேர்தல் வெற்றிக்காக அதே ரஷ்யாவிடம் டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டுப் பொருளாதார அழுத்தங்களும் தேர்தல் அரசியலும் உலகின் வல்லரசு நாடுகளின் நிலைப்பாடுகளையே எவ்வாறு மாற்றி அமைக்கின்றன என்பதை இந்த நிகழ்வு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
பிக் பாஸ் வீட்டில் அக்ஷிதா தனது படுக்கையில் வைத்திருந்த நாப்கினைப் பார்த்த டிடிஎஃப் வாசன், அதன் அளவைக் குறித்து அவரிடம்…
திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக இருந்தவர், நடிப்பின் மீதான தணியாத ஆர்வத்தால் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று,…
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனி இடம்பிடித்த நாட்டுப்புறக் கலைஞரும், நடிகையுமான தாமரைச் செல்வி தனது இரண்டாவது…
புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் சாலையோரம் தண்ணீர் விற்றுக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவன், அடையாளம் தெரியாத நபரால் திடீரெனக் காரில் கடத்தப்பட்டான்.…
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் உயிரியல் பூங்காவில் குடும்பத்தினருடன் சென்றிருந்த மூன்று வயது சிறுவனை, கற்றல் குறைபாடு கொண்ட ஒரு நபர் திடீரென…
பிக்பாஸ் புகழ் ஜூலி தனது கர்ப்ப காலம் குறித்து சமூக வலைதளங்களில் வக்கிரமான முறையில் விமர்சனம் செய்பவர்களுக்கு எதிராக இன்ஸ்டாகிராம்…