நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat) அவல நிலையை வீடியோவாக வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 22-வது மாடியில் வீடு வாங்கியுள்ள அவர், வீட்டின் உட்புறத்தை (Interior) அழகாக மாற்ற முடிந்தாலும், வெளிப்புறத்தின் மோசமான நிலையைக் கண்டு தான் ஏமாந்துவிட்டதாக வருத்தப்படுகிறார். குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் புறாக்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், அவற்றின் கழிவுகள் மற்றும் அசுத்தங்களால் தனது பால்கனி பகுதி முழுவதும் புழுக்களும் பூச்சிகளும் மொய்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
புறாக்களால் பரவும் இந்த அசுத்தங்கள் மற்றும் கிருமிகளால் தனது கண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சிவந்த நிலையில் உள்ள தனது கண்களையும் அவர் வீடியோவில் காட்டியுள்ளார். இந்த சுகாதாரமற்ற சூழலில் இருந்து தப்பிக்கத் தனது பால்கனியில் வலைகள் மற்றும் கதவுகளை அமைத்த பிறகும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று ஆதர்ஷ் வேதனை தெரிவிக்கிறார். “இவ்வளவு பணம் கொடுத்து வாங்கிய வீட்டில் இதையெல்லாம் பார்ப்பதற்காகவா நான் முதலீடு செய்தேன்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பல லட்சங்களைச் செலவழித்து அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதை விட, சொந்தமாக ஒரு இடத்தையோ அல்லது தனி வீட்டைத் தேர்ந்தெடுப்பதோ சிறந்தது என்றும் அவர் தனது வீடியோவில் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்காத காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களின் பட்டியலைத் தயாரிக்குமாறு கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலுக்கு ராகுல் காந்தி…
இளம்பெண்ணிற்கு பெற்றோர் பார்த்து கிராமத்திலேயே முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் அந்தப் பெண்ணின் கவனம் தன்…
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகையை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்…
ஹைதராபாத் பாலநகர் மேம்பாலம் அருகே வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஷாபூரிலிருந்து அமீர்பேட்டையிலுள்ள தனது…
கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய 67 வயதான லக்ஷ்மம்மா என்ற மூதாட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை.…
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…