சென்னை வியாசர்பாடி பகுதியில் சேர்ந்து ஐந்து வயது சிறுமி ஒருவர் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் தன்னுடைய தாத்தா பாட்டி வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே சிறுமி தினமும் தாத்தா பாட்டி வீட்டுக்கு வந்து வெளியே விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் எதிர் வீட்டில் வசித்து வரும் நபர் ஒருவர் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் அருவருக்கத்தக்க வகையில் ஆபாச சைகையை காண்பித்துள்ளார். மேலும் கையில் நூறு ரூபாயை வைத்துக் கொண்டு சிறுமியை இங்கே வா என்று அழைத்துள்ளார்.
அவரின் இந்த செயலை அருகில் இருந்தவர்கள் எதர்ச்சையாக பார்த்த நிலையில் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்யா என்ற 55 வயது நபரை கைது செய்துள்ளனர். வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…