“வேணாண்டா இத்தோட முடிச்சுக்கலாம்”… உயிருக்கு உயிரான காதலை முறித்துக் கொள்ள முடிவெடுத்த காதலி… நேரில் சந்தித்தபோது காதலன் எடுத்த விபரீத முடிவு..!

Spread the love

திருவாரூர் அருகே மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (23) என்பவர் பிபிஏ படித்துள்ள நிலையில் கும்பகோணம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ (19) என்ற கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நம் காதலை தொடர வேண்டாம் என்று ஜெயஸ்ரீ பிரவீன் குமாரிடம் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த பிரவீன் நேரில் பேசி முடிவு எடுக்கலாம் என்று கூறி ஜெயஸ்ரீயை வரவழைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று பிரவீன் குமார் கும்பகோணம் சென்று ஜெயஸ்ரீயை பைக்கில் திருவாரூர் அழைத்து வந்துள்ளார். செல்லும் வழியில் திருக்கண்ணமங்கை பகுதிக்கு வந்த இருவரும் அங்கிருந்த சேட்டா குளம் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தங்கள் காதலை முறித்துக் கொள்வதில் ஜெயஸ்ரீ பிடிவாதமாக இருந்ததால் ஏமாற்றமடைந்த பிரவீன் திடீரென்று அங்கிருந்த குளத்தில் குதித்தார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத ஜெயஸ்ரீ ஓடிச்சென்று அவரும் குளத்தில் குதித்து பிரவீன் குமாரை காப்பாற்ற முயன்றார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயஸ்ரீ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

1 மணத்தியாலம் ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

1 மணத்தியாலம் ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

2 மணத்தியாலங்கள் ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

2 மணத்தியாலங்கள் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

2 மணத்தியாலங்கள் ago