கேரளா மாநிலத்தை சேர்ந்தவர், சிவலோஷ் (28). இவர் வாழைக்குளம் பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சிவலோஷ் குடும்பத்தினர், வாழைக்குள பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தனர். பாறைத்தோடு பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி (20). இவர் வாழைக்குளம் பகுதியில், ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். அப்பொழுது சிவலோசுக்கும் மீனாட்சிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர்.
சிவலோசின் குடும்பத்தினர், நேற்று முன்தினம் வெளியூருக்கு சென்றிருந்த நிலையில், சிவலோசு மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அன்று மாலை சிவலோசின் நண்பர், சிவலோசை செல்போனில் தொடர்பு கொண்டார். அவர் எடுக்கவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த அவர், சிவலோசின் வீட்டுக்குச் சென்று பார்த்த பொழுது, வீட்டின் முன் கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது, ஒரு அறையில் சிவலோஷ், மின்விசிறியில் தூக்கிட்டு பிணமாக தூங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு அறையில், துணியால் கழுத்தை நெரித்த நிலையில் மீனாட்சி பிணமாக கிடந்தார்.
தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில், “காதலர்கள் அடிக்கடி தலைமையில் சந்தித்து வந்ததாகவும், நேற்று முன்தினம் தனிமையில் சந்தித்த பொழுது, வாய் தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த சிவலோஷ், மீனாட்சியை கொலை செய்து விட்டு, பின் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்” என தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…