பள்ளி தோழனோடு ஆசிரியை செய்த காரியம்… பார்க்ககூடாததை பார்த்த மகன்… அடுத்தடுத்து நடந்த கொடூரம்.. கள்ளகாதலனுக்கு மரணதண்டனை..!!

Spread the love

கர்நாடகா மாநிலம் சிவமொக்க மாவட்டம் சொரா டவுன் பகுதியை சேர்ந்தவர் இம்தியாஸ், கலபுரகியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த லட்சுமி , இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இரு குடும்பத்தினரும் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அதனால் இம்தியாஸ் மற்றும் லட்சுமி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். பின்பு இம்தியாஸ் சொரப் தாலுகா தலைக்குந்தா கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல் லட்சுமியையும் பத்ராவதி அருகே அந்தரகங்கே உள்ள அரசுப் பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

பணி மாற்றத்தின் காரணத்தினால் கணவன் மனைவி இருவரும் பத்ராவதி டவுன் ஜன்னாபுரா என்.டி.பி அலுவலகம் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்து சில நாட்களிலேயே வீட்டின் அருகே பள்ளிக்கூடத் தோழன் டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்துள்ளார் லட்சுமி. இதைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியும் லட்சுமியும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர் நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

லட்சுமி கணவன் வீட்டில் இல்லாத போது கிருஷ்ணமூர்த்தியை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இச்சம்பவத்தை பார்த்த லட்சுமியின் மகன் பேர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அச்சிறுவன் தந்தையிடம் இதைப் பற்றி கூற மனைவியை இம்தியாஸ் கண்டித்துள்ளார் மற்றும் கள்ளக்காதலை துண்டித்து விட வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.  இருப்பினும் லட்சுமி யார் சொல்வதையும் காதை போட்டுக் கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையை யொட்டி இம்தியாஸ் அவரது பெற்றோரின் வீட்டிற்கு சென்று இருந்தார். அந்த நேரத்தில் லட்சுமி மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவரும் அறையினுள்ளே உல்லாசமாக இருந்ததைக் கண்டுப் பேரதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.   தகராறில் லட்சுமி ஆத்திரமடைந்து கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்தியை தொடர்புக் கொண்டு கணவனைக் கொல்ல வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார்.

அதன் பேரில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது நண்பர் சிவராஜ் இருவரும் லட்சுமி வீட்டிற்குச் சென்றுள்ளனர். லட்சுமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிவராஜ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் இம்தியாஸை அடித்தே கொன்றுள்ளனர். உடலை பத்ரா கால்வாயில் வீசி உள்ளனர். இச்சம்பவத்தை அறிந்த இம்தியாஸின் தம்பி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கொலை தொடர்பில் உள்ள மூன்று பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை நடந்து வந்தது.

கடந்த 9 ஆண்டுகளாக விசாரணை நடந்து கொண்டிருந்தது. இந்த வழக்கிற்கு நேற்று நீதிபதி இந்திரா மயில்சாமி செட்டியார் தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றவாளியான லக்ஷ்மிக்கும் கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்திக்கும் மரண தண்டனை விதித்துள்ளார். மற்றும் உதவிய சிவராஜிக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ளார். மூவரையும் சிவமொக்க மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தீர்ப்பு வந்தவுடன் லட்சுமி கதறி அழுது மரண தண்டனையை மாற்றக் கோரி கதறியுள்ளார்.

Divyamayakannan

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

5 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

5 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

5 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

5 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

7 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

7 மணத்தியாலங்கள் ago