Connect with us

CINEMA

‘Love you முத்தே’… மகனின் பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுஜிதா…  பர்த்டே வீடியோ வைரல்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாக்கிக் கொண்டுள்ளது. கூட்டு குடும்பம், குடும்ப ஒற்றுமை, குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள், விட்டுக் கொடுத்தல் என பல விஷயங்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காட்டி வருகிறது.

   

இல்லத்தரசிகளின் மிக விருப்பமான சீரியல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.  தற்பொழுது இந்த சீரியலில் தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது முல்லைக்கு தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் வருபவர் நடிகை சுஜிதா. இவர் தனம் என்ற கதாபாத்திரத்தில் தனது நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்.

நல்ல அண்ணியாக, ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து தனது குடும்பத்தை கவனித்து வருகிறார் தனம். இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபலமான நடிகை ஆவார். சிறுவயதிலிருந்தே வெள்ளித்திரையில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை சுஜிதா. இவர் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சுஜிதா. இவர் தற்பொழுது தனது மகனின் பிறந்தநாளை குடும்பத்தோடு இணைந்து கொண்டாடிய அழகான வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Sujithar (@sujithadhanush)

Continue Reading

More in CINEMA

To Top