நாளை அறுவை சிகிச்சை… இன்று மரணம்..! தீ விபத்தில் கல்லீரல் நோயாளி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

Spread the love

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டுக் குடும்பம், கல்லீரல் செயலிழந்த தங்களது குடும்ப உறுப்பினருக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில் டெல்லியில் உள்ள சாக்கெட் மேக்ஸ் மருத்துவமனைக்கு வந்திருந்தது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக இரத்தக் குழுக்கள் பொருந்தி, அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் முடிந்து, அறுவை சிகிச்சைக்கு சில மணி நேரங்களே இருந்தன. வியாழக்கிழமை நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவிருந்த நிலையில், அதற்கு முதல் நாள் புதன்கிழமை அவர்கள் தங்கியிருந்த டெல்லி மாளவியா நகர் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளி, அவருக்குக் கல்லீரல் வழங்கவிருந்த கொடையாளி மற்றும் அவர்களைப் பராமரிக்க வந்த உதவியாளர் ஆகிய மூன்று பேரும் உயிருடன் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கொடூர விபத்திற்கு ஹோட்டல் உரிமையாளரின் பேராசையும், அதிகாரிகளின் அலட்சியப்போக்குமே முக்கியக் காரணம் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ‘பெட் அண்ட் பிரேக்பாஸ்ட்’ (Bed and Breakfast) கொள்கையின் கீழ் வெறும் 6 அறைகள் மட்டுமே நடத்துவதற்கு உரிமம் பெற்றிருந்த ஹோட்டல் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ், டெல்லியில் “எல்லாம் செல்லும்” என்ற அலட்சிய எண்ணத்தில் விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, சட்டவிரோதமாக 25 அறைகளைக் கட்டியுள்ளார். இந்த விதிமீறல்களை உள்ளூர் நிர்வாகமும், மாநகராட்சியும் கண்டுகொள்ளாமல் கண்மூடி இருந்ததன் விளைவாக, பர்மிங்காம் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட மொத்தம் 21 இந்த தீ விபத்தில் தங்களது உயிரை இழக்க நேரிட்டது.

ஒரு புதிய விடியலை நோக்கிப் பிரார்த்தனைகளுடன் காத்திருந்த குடும்பத்தில், தற்போது மரண ஓலம் மட்டுமே எஞ்சியுள்ளது. உயிரிழந்த மூவரின் உடல்களும் எய்ம்ஸ் மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜை டெல்லி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனித உயிர்களுடன் விளையாடி, சட்டவிரோதக் கட்டுமானங்களுக்குக் காரணமானவர்கள் மீதும், இதற்குத் துணை நின்ற அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

2 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

2 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

2 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

2 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

2 மணத்தியாலங்கள் ago