“பதவிகள் காலி… ஆனால் லீமா ரோஸ் மட்டும் சேஃப்”…. அதிமுகவுக்குள் ஓடும் அந்த ‘அண்டர்கிரவுண்ட்’ அரசியல்…. எடப்பாடியை முடக்கிய அந்த ரகசியம்….!

Spread the love

அதிமுகவில் லீமா ரோஸ் மார்ட்டின் விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் மீண்டும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளித்த மற்ற நிர்வாகிகள் மீது கட்சித் தலைமை கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுத்த நிலையில், லீமா ரோஸ் மார்ட்டின் மீது மட்டும் ஏன் மெத்தனம் காட்டப்படுகிறது என்ற விமர்சனங்கள் வலுத்து வருகின்றன. கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரும், தமிழகத்திலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளராகக் கருதப்பட்டவருமான லீமா ரோஸ் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் பாயாதது கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 29 பேரை அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியிருந்தார். மேலும், தவெகவுக்கு ஆதரவளித்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடமும் கடிதம் அளிக்கப்பட்டது. இந்த 25 பேரில் லீமா ரோஸும் ஒருவர் என்ற போதிலும், அவர் தற்போதும் அதிமுக மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் பதவியில் தொடர்ந்து நீடித்து வருகிறார். நேற்று ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய மகளிர் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பங்கேற்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதிமுகவின் இந்த இரட்டை நிலைப்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான என். பொன்குமரகுருபரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். தவெக தலைவர் விஜய் சிறப்பாக ஆட்சி நடத்துவதாகவும், தமிழ்நாட்டில் மாற்றம் வரும் என்றும் லீமா ரோஸ் பகிரங்கமாகப் பாராட்டிய பின்னரும், கட்சித் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “தனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர்களின் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸின் பதவியை மட்டும் இன்னும் பறிக்கவில்லை என்றால், அதிமுக யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமா அல்லது லாட்டரி அதிபர் மார்ட்டினிடமா?” என அவர் நேரடியாகவே சாடியுள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கை என்று வரும்போது கட்சியில் அனைவருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை ஏன் பின்பற்றப்படவில்லை என்ற குமரகுருபரனின் இந்த டபுள் கேள்வி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிலுமே இந்த விவகாரம் உற்றுநோக்கப்பட்டு வரும் நிலையில், லீமா ரோஸ் மீதான அதிருப்தி தொண்டர்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த மௌனமும் மெத்தனமும் அதிமுகவின் உட்கட்சி ஜனநாயகம் மற்றும் தலைமைத்துவத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Nanthini

Recent Posts

பற்றி எரியும் அதிமுக… அடுத்தடுத்து உடையும் விக்கெட்டுகள்…! கூடாரத்தைக் காக்க எடப்பாடி எடுத்த அந்த ‘ஒரே ஒரு’ மரண மாஸ் முடிவு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

9 மணத்தியாலங்கள் ago

விரல்களை இழந்து தவித்த… பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய.. அமைச்சர் ராஜ்மோகன்…!

தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…

9 மணத்தியாலங்கள் ago

விமான நிலையத்தில் பகல் கொள்ளை..? 7 நிமிட விதியை மீறி… பயணிகளிடம் கட்டாய வசூல்… ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்கள்…!!

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…

9 மணத்தியாலங்கள் ago

லைக்குகாக இப்படியா?… ஒரு நொடி தவறினாலும் அவ்ளோதான்..! நூற்றுக்கணக்கான அடி ஆழப் பள்ளத்தாக்கு… நீர்வீழ்ச்சி விளிம்பில் உயிரைப் பணயம் வைத்த பெண்… நெட்டிசென்கள் அதிர்ச்சி…!!

சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…

9 மணத்தியாலங்கள் ago

கண்ணீர் விட்ட குடும்பங்கள்… 41 உயிர்கள் பலியான அந்த இடத்திற்கு நேரில் செல்லும் முதல்வர்… கரூரில் நடக்கப்போகும் அந்த பயங்கர ட்விஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…

9 மணத்தியாலங்கள் ago

ஷாக்.. மாதம் ரூ 71,000 காலியாகுதா…?! பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர்… வெளியிட்ட பகீர் வீடியோ..!

பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…

9 மணத்தியாலங்கள் ago