“அப்படியே தூக்கி வீசப்பட்ட தலை”… ஓட ஓட விரட்டி 5 வயதுக் குழந்தையோடு தந்தை படுகொலை… நெல்லையில் நடந்த சினிமா பாணி கொடூரம்…!

Spread the love

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பட்டப்பகலில் அரங்கேறியுள்ள கொடூர இரட்டை கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமாவில் வரும் காட்சிகளைப் போல, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவர்களை மர்ம கும்பல் ஒன்று காரால் மோதி தள்ளிவிட்டு, பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டித் தள்ளியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு, நடுரோட்டில் வீசப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சட்டம் ஒழுங்கு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மூலச்சி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (45) என்பவர், தனது மூத்த மகன் சின்னதுரை மற்றும் 5 வயது இளைய மகனுடன் மோட்டார் சைக்கிளில் சேரன்மகாதேவி அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, இவர்களைப் பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று பைக் மீது பலமாக மோதியது. இதில் மூன்று பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்த கணப்பொழுதில், காரில் இருந்து இறங்கிய ஆயுதமேந்திய கும்பல் காளிமுத்துவை கொடூரமாக வெட்டி, அவரது தலையைத் துண்டித்து நெல்லை – கல்லிடைக்குறிச்சி சாலையில் வீசிவிட்டு தப்பியோடியது. இந்த கோரத் தாக்குதலில் காளிமுத்துவின் 5 வயது குழந்தையும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்; படுகாயமடைந்த மூத்த மகன் சின்னதுரை தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட எஸ்பி மற்றும் காவல்துறையினர், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மூலச்சி பகுதியில் சாதி ரீதியான மோதலில் பெருமாள் பாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கும், தற்போதைய கொலைக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த சம்பவத்திற்குப் பழிக்கு பழியாகவே இந்த இரட்டை கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

பற்றி எரியும் அதிமுக… அடுத்தடுத்து உடையும் விக்கெட்டுகள்…! கூடாரத்தைக் காக்க எடப்பாடி எடுத்த அந்த ‘ஒரே ஒரு’ மரண மாஸ் முடிவு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

2 மணத்தியாலங்கள் ago

விரல்களை இழந்து தவித்த… பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய.. அமைச்சர் ராஜ்மோகன்…!

தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…

3 மணத்தியாலங்கள் ago

விமான நிலையத்தில் பகல் கொள்ளை..? 7 நிமிட விதியை மீறி… பயணிகளிடம் கட்டாய வசூல்… ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்கள்…!!

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…

3 மணத்தியாலங்கள் ago

லைக்குகாக இப்படியா?… ஒரு நொடி தவறினாலும் அவ்ளோதான்..! நூற்றுக்கணக்கான அடி ஆழப் பள்ளத்தாக்கு… நீர்வீழ்ச்சி விளிம்பில் உயிரைப் பணயம் வைத்த பெண்… நெட்டிசென்கள் அதிர்ச்சி…!!

சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…

3 மணத்தியாலங்கள் ago

கண்ணீர் விட்ட குடும்பங்கள்… 41 உயிர்கள் பலியான அந்த இடத்திற்கு நேரில் செல்லும் முதல்வர்… கரூரில் நடக்கப்போகும் அந்த பயங்கர ட்விஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…

3 மணத்தியாலங்கள் ago

ஷாக்.. மாதம் ரூ 71,000 காலியாகுதா…?! பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர்… வெளியிட்ட பகீர் வீடியோ..!

பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…

3 மணத்தியாலங்கள் ago