திமுக – அதிமுக ரகசிய டீல்?… ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய அதிமுக கொறடா…. தமிழக அரசியலில் புதிய ‘கோயபல்ஸ்’…!

Spread the love

தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக கொறடா அக்ரிகிருஷ்ண மூர்த்தி விடுத்துள்ள காரசாரமான அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த விமர்சனத்தை திட்டவட்டமாக மறுத்துள்ள அக்ரிகிருஷ்ண மூர்த்தி, சுயநலத்திற்காக இயக்கத்தைக் காட்டிக்கொடுப்பவர்கள் வரலாற்றுப் பிழை செய்வதாகச் சாடியுள்ளார்.

அவரது அறிக்கையில், ‘ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்’ என்ற கோயபல்ஸின் தத்துவத்தை தற்போதைய அரசியல்வாதிகள் சிலர் கையில் எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அஇஅதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய ஆளுமைகள் பல சோதனைகளையும் தேர்தல் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளதாகக் கூறிய அவர், அப்போதெல்லாம் இயக்கத்தை விட்டுச் சென்றவர்கள் ஆளுங்கட்சியில் அடைக்கலம் புகுந்த வரலாற்றுப் பின்னணியையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

திமுக போன்ற தீய சக்திகளை ஒழிப்பதே அதிமுகவின் கொள்கை என்று குறிப்பிட்ட அவர், இல்லாத ஒரு குற்றச்சாட்டை அபாண்டமாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சுமத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒன்றுகூடி எடப்பாடியாரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்த தீர்மானத்தை நினைவுகூர்ந்த அவர், திமுகவின் ஆதரவோடு ஆட்சி அமைக்க முயன்றதாகக் கூறுவது முற்றிலும் திட்டமிடப்பட்ட பொய் என்று அக்ரிகிருஷ்ண மூர்த்தி விளக்கியுள்ளார்.

இறுதியாக, கட்சிக்கு விசுவாசம் இல்லாமல், தங்களின் சுகபோக வாழ்விற்காக மாற்றுக் கட்சியை நோக்கி ஓடுபவர்களுக்குத் தமிழக மக்களும், கழகத் தொண்டர்களும் தகுந்த நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரித்துள்ளார். மேலும், பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு ஆகாயத்தில் கோட்டை கட்ட நினைப்பவர்களின் எண்ணம் வெறும் கானல் நீராகவே முடியும் என்றும் அவர் தனது அறிக்கையின் வாயிலாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

பற்றி எரியும் அதிமுக… அடுத்தடுத்து உடையும் விக்கெட்டுகள்…! கூடாரத்தைக் காக்க எடப்பாடி எடுத்த அந்த ‘ஒரே ஒரு’ மரண மாஸ் முடிவு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

6 மணத்தியாலங்கள் ago

விரல்களை இழந்து தவித்த… பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய.. அமைச்சர் ராஜ்மோகன்…!

தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…

6 மணத்தியாலங்கள் ago

விமான நிலையத்தில் பகல் கொள்ளை..? 7 நிமிட விதியை மீறி… பயணிகளிடம் கட்டாய வசூல்… ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்கள்…!!

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…

6 மணத்தியாலங்கள் ago

லைக்குகாக இப்படியா?… ஒரு நொடி தவறினாலும் அவ்ளோதான்..! நூற்றுக்கணக்கான அடி ஆழப் பள்ளத்தாக்கு… நீர்வீழ்ச்சி விளிம்பில் உயிரைப் பணயம் வைத்த பெண்… நெட்டிசென்கள் அதிர்ச்சி…!!

சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…

6 மணத்தியாலங்கள் ago

கண்ணீர் விட்ட குடும்பங்கள்… 41 உயிர்கள் பலியான அந்த இடத்திற்கு நேரில் செல்லும் முதல்வர்… கரூரில் நடக்கப்போகும் அந்த பயங்கர ட்விஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…

7 மணத்தியாலங்கள் ago

ஷாக்.. மாதம் ரூ 71,000 காலியாகுதா…?! பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர்… வெளியிட்ட பகீர் வீடியோ..!

பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…

7 மணத்தியாலங்கள் ago