லீப் ஆண்டு என்றால் என்ன தெரியுமா?…. இதற்கு பின்னால் இருக்கும் வியக்கவைக்கும் அறிவியல் காரணம்…. இதோ முழு விவரம்….!!!!!

Spread the love

நாள்காட்டியில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி 29 வது நாள் இடம் பெறும். கால அளவில் அதிசயமான இந்த நாள் லீப் ஆண்டில் மட்டும் வருகிறது. லீப் ஆண்டு என்றால் என்ன? இதற்கு அறிவியல் ரீதியான காரணம் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் காலண்டரின் பெயர் கிரிகோரியன் காலண்டர். இதனை பிரபலப்படுத்தியவர் போப் 13ஆம் கிரிக்கோரி என்பதால் இந்த காலண்டர் இவரது பெயரிலேயே அழைக்கப்படுகின்றது. ஆனால் லீப் வருடம் என்பது இந்த காலண்டருக்கும் முந்தைய ஜூலியன் காலண்டரில் இருந்தது என்றும் முதன் முதலில் இந்த லீப் வருட யோசனையை கொண்டு வந்தது அன்றைய ரோமாபுரி மன்னன் ஜூலியஸ் சீசர் என்றும் கூறப்படுகின்றது. கிமு 45 ஆம் ஆண்டில் ரோமாபுரியை ஆண்ட அரசர் தான் இவர்.

அந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய காலண்டர் பத்து மாதங்கள் கொண்டதாகவும் அதில் பிப்ரவரி கடைசி மாதமாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 22 நாட்களைக் கொண்ட ஒரு மாதம் புதிதாக சேர்க்கப்பட்டு வந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை 22 நாட்கள் குழப்பத்தை தீர்ப்பதற்காக ஜூலியஸ் சீசர் தனது அமைச்சரவையின் sosigenes என்ற வானவியலாளரின் உதவியை நாடிய பிறகு அவர் தயாரித்த காலண்டரில் தான் முதன்முறையாக வருடத்திற்கு 365 நாட்களும் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை கடைசி மாதமாக இருந்த பிப்ரவரியில் கூடுதலாக ஒரு நாளை சேர்க்கும் வழக்கமும் அறிமுகமானது.

அதுமட்டுமல்லாமல் காலண்டரில் புதிதாய் ஜூலை மற்றும் ஆகஸ்ட் என்ற இரண்டு மாதங்கள் சேர்க்கப்பட்டதும் ஒரு வருடத்தில் 12 மாதங்கள் ஆனதும் அப்போதுதான். அதாவது காலண்டரின் இடையே சேர்க்கப்படும் நாளான பிப்ரவரி 29 லீப் தினமாக மாறியது அப்போது தான். பொதுவாக நம்முடைய காலண்டரும் பூமி சூரியனைச் சுற்றி வரும் நாட்களும் சமம் என்றாலும் உண்மையில் பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வருவதற்கு சரியாக 365 நாட்கள் 5 மணி நேரம் 48 நிமிடங்கள் 46 வினாடி ஆகின்றது.

இந்த அதிகப்படியான நேரத்தை நான்கு வருடத்திற்கு ஒருமுறை ஒரு நாளை கூட்டி லீப் வருடம் என்று கணக்கிட்டாலும் இதிலும் ஒவ்வொரு வருடமும் 11 நிமிடம் 14 வினாடி வித்தியாசம் இருப்பதை சரி செய்வதற்காக நான்கு 100 ஆண்டுகளில் மூன்று முறை நீ பாண்டுகளை தவிர்த்து விடுகின்றது இந்த கிரிகோரியன் காலண்டர். அதாவது 1,2,3ஆம் வருடங்கள் லீப் வருடங்களாக இல்லாமல் நான்காம் வருடம் லீப் வருடம் ஆனதோ அதனைப் போலவே நூறின் மடங்கு வருடங்களில் 100, 200, 300 ஆம் வருடங்கள் லீப் வருடங்களா இல்லாமல் 400 ஆம் வருடம் மட்டும்தான் லீப் வருடமாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

நாம் கடந்து வந்த 2000 ஆம் வருடமானது லீப் வருடமாக இருந்தாலும் இதற்கு முந்தைய 1900, 1800, 1700 லீப் வருடங்கள் இல்லை என்பதும் இதற்கு அடுத்த 2100, 2200 மட்டும் 2300 ஆம் லீப் வருடங்களாக இருக்காது என்பதும் இனி 2400 ஆம் ஆண்டு மட்டுமே லீப் வருடமாக இருக்கும் என்பதும் இந்த நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும் லீப் வருடத்தின் சிறப்பு ஆகும். ஆகவே ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு நாள் கூடுதலாகும்.

லீப் ஆண்டு என்பது 366 நாட்கள் கொண்ட ஆண்டாகும். இந்த ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்களோடு லீப் ஆண்டு என அழைக்கப்படுகிறது. பூமி சூரியனை சுற்றி வரும் கால அளவைக் கொண்டு லீப் ஆண்டு கணக்கிடப்படுவதால் பருவ நிலைகளில் மாற்றம் ஏற்படாது என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் பிப்ரவரி 29ஆம் தேதி கிட்டத்தட்ட 3.5 லட்சம் பேர் புதிதாக பிறக்கிறார்கள் என்றாலும் இவர்கள் அனைவரும் தங்கள் பிறந்த நாளை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தான் சரியான நாளில் கொண்டாட முடியும்.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

17 minutes ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

24 minutes ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

39 minutes ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

45 minutes ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

56 minutes ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

1 மணத்தியாலம் ago