கால் பாதங்களில் குறிப்பாக குதிகால்களில் ஏற்படும் வெடிப்புகளுக்கு பல காரணங்கள் உள்ளது. பொதுவாக உடலில் மற்ற இடங்களை விடவும் கால் பாதங்களில் அதிக அழுக்குகளும் தூசிகளும் படியும். நடக்கும்போது சாலையில் உள்ள அழுக்குகள் முதலில் நம்முடைய கால்களை தான் தாக்கும். மற்ற இடங்களை விட பாதங்களை அதிகமாக நாம் சுத்தம் செய்வது கிடையாது. இறந்த செல்கள் தேங்கி தேங்கி நாளடைவில் அதை வெடிப்புகளாக மாறி விடுகின்றது. பாத வெடிப்பு நிறைய பேருக்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். என்னதான் மார்க்கெட்டுகளில் கிடைக்கக்கூடிய பலவகை கிரீம்களை வாங்கி போட்டாலும் சிலருக்கு அது சரியாவது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதம் நிறைய தீர்வுகளை வழங்குகிறது.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் 50 மில்லி.
வேப்ப எண்ணெய் 20 மில்லி.
கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன்
மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன்.
சந்தன பொடி ஒரு ஸ்பூன்
வேப்பம்பூ பொடி ஒரு ஸ்பூன்
செய்முறை:
ஈரம் இல்லாத பவுல் அல்லது மண் பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் மேலே சொன்ன பொடி வகைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்ந்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு அதில் கற்றாழை ஜெல்லை சேர்த்து பேஸ்ட் ஆக செய்யவும். அதில் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு ஸ்மூத்தான பேஸ்ட் ஆக கலக்கி கடைசியில் வேப்ப எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்தால் ஒரு பதத்திற்கு வரும்.
இந்த கிரீம் உங்களுடைய வெடிப்புள்ள பாதங்களை ஆழமாக ஈரப்பதம் செய்து மென்மையாக்கும். நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு பாத வெடிப்புகளில் உள்ள நுண்கிருமிகளை அழித்து பாதுகாப்பான சருமத்தை கொடுக்கும். தினமும் தொடர்ந்து இரவு நேரத்தில் பயன்படுத்தி வரலாம். பகல் நேரத்திலும் நடக்காமல் ஓய்வாக இருக்கும் போது அப்ளை செய்யலாம். இதில் சேர்க்கப்படக்கூடிய அனைத்து பொருட்களும் சரும பிரச்சனைகளை போக்க உதவும். பாத வெடிப்பில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் ஆகிய பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
பாத வெடிப்பு பிரச்சனை ஓரளவு சரியான பிறகு மீண்டும் பழையபடி அதை பராமரிக்காமல் அப்படியே விட்டுவிடக்கூடாது. 15 நிமிடங்களாவது தினமும் வெதுவெதுப்பான நீரில் கால்களை ஊற வைக்க வேண்டும். பிறகு மென்மையானது பீர்க்கு நார் இருந்தால் மெதுவாக தேய்த்து அதில் உள்ள இறந்த செல்களை முற்றிலும் நீக்க வேண்டும். குறிப்பாக பாதங்களுக்கு அதிக வாசனை தரும் கிரீம்கள் மற்றும் வாசனை திரவியங்கள் சேர்த்த சோப் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், கொக்கோ பட்டர் போன்ற உள் பொருள்கள் கலந்தவற்றை பயன்படுத்துவது மிகவும் நல்லது
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…