கொங்கு மண்டல அரசியலில் பெரும் அதிரடியாக, திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடந்த தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிருப்தி தலைவர்கள் பலர், செங்கோட்டையனை நேரில் சந்தித்து இது குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த கையோடு பிரம்மாண்டமான இணைப்பு விழாவை நடத்த அவர் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு பகுதியில், இரு பெரும் கட்சிகளிலிருந்தும் கணிசமான நிர்வாகிகள் தவெகவுக்கு மாறத் தயாராகி வருவது, வரவிருக்கும் அரசியல் களத்தில் ஒரு முக்கிய மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசின் வருமானம், செலவினங்கள் மற்றும் கடன்…
தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது…
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையிலான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.…
சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில்…
தமிழக அரசு ஊழியர்களின் மருத்துவ நலனைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு…
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…