தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசின் வருமானம், செலவினங்கள் மற்றும் கடன் நிலவரங்கள் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாநிலத்தின் சொந்த வரி வருவாயாக ரூ.2,26,740 கோடியும், வரி அல்லாத வருவாயாக ரூ.27,835 கோடியும் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய வரிகளின் பங்காக ரூ.62,531 கோடியும், உதவி மானியங்களாக ரூ.32,922 கோடியும் கிடைக்கப்பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், அரசின் மொத்தச் செலவினம் ரூ.4,05,802 கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
செலவினங்களைப் பொறுத்தவரை, அரசுப் பணியாளர்களின் ஊதியத்திற்காக ரூ.91,032 கோடியும், ஓய்வூதியப் பலன்களுக்காக ரூ.41,846 கோடியும், பழைய கடன்களுக்கான வட்டி செலுத்த ரூ.78,683 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போதைய நிதிநிலையில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.55,775 கோடியாக உள்ள சூழலில், 2027-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி மாநிலத்தின் மொத்த நிலுவைக் கடன் ரூ.10,98,768 கோடியாக அதிகரிக்கும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கான…
தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தில்…
தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது…
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையிலான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.…
சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில்…