உணவு மானியத்திற்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு…! “ரேஷன் கடைகளில் இனி முழு கோதுமைக்கு குட்பை…” பட்ஜெட்டில் வெளியான பாக்கெட் கோதுமை மாவு திட்டம்…!!

Spread the love

தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தில் புதிய மாற்றங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை முழு கோதுமையாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி அதற்குப் பதிலாகப் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கோதுமை மாவு வழங்கும் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இப் புதிய முயற்சியைச் செயல்படுத்துவதற்காக ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்காக மொத்தமாக ரூ.14,830 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், அத்தியாவசியப் பொருட்களை அவர்களின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று விநியோகிக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இச்சேவையை மாநிலம் முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக அரசு சார்பில் ரூ.7.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கொண்டுவரப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள் கார்டுதாரர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Devi Ramu

Recent Posts

ஐயோ வலிக்கிது… என்னை விட்ருங்க ப்ளீஸ்… கதறிய மனைவியின் கழுத்தை முறுக்கி… தரையில் தலையை மோதி கொன்ற கொடூரக் கணவன்… தெலுங்கானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத் தலைமையகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில், 43 வயதான மகபூப் பீ என்ற பெண் ஊர்க்காவல்…

2 minutes ago

ஐயோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கையில் பட்டாசை வெடிக்க வைத்த இளைஞருக்கு… 5.5 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை… பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிடுவதற்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள். சிலர் உயரமான இடங்களில் ஏறி ஆபத்தான…

16 minutes ago

அட கடவுளே… மகனைத் தூக்கிக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்… கதறித் துடிக்கும் கணவர்… நெடுனூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

ஃபியூச்சர் சிட்டி எல்லைக்குட்பட்ட நெடுனூர் பகுதியில் உள்ள மான்யகுடா தாண்டாவைச் சேர்ந்த அனுஷா என்ற திருமணமான பெண், பிரேம் குமார்…

33 minutes ago